சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!!
சீன புத்தாண்டு ஜனவரி 29ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் செங் ஹோக் என்பவர் ஓடியே புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்தப் புத்தாண்டு சீனப் பஞ்சாங்கத்தின் படி பாம்பு வருடமாக அனுசரிக்கப்பட உள்ளது.
இதனால் அந்த நபர் தான் ஓடும் பாதையை பாம்பு போல உருவாக்கியுள்ளார்.
பாம்பின் தலைப்பகுதி தெம்பனீஸ் ஈஸ்ட் பகுதியிலும் பாம்பின் வால் பகுதி தெம்பனீஸ் அவென்யூ 10 இல் உள்ளதை வரைபடத்தில் காணலாம்.
அவர் ஓடிய பாதையின் வரைபடத்தை Strava Art எனும் facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.அந்த வரைப்படம் 57000 பேர் லைக்களைப் பெற்றுள்ளது.
பாம்பின் உடலானது அந்த இரண்டு இடங்களுக்கு இடையே வளைந்து வளைந்து போவதைக் காணலாம்.
மேலும் பலர் கேள்விகளையும் எழுப்பினர்.
Follow us on : click here