சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!!

சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!!

சீன புத்தாண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் சைனா டவுன் பகுதியில் வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்தப் புத்தாண்டு சீன பஞ்சாங்கத்தின்படி பாம்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.சீனர்கள் பாம்பு ஆண்டை வரவேற்க தயாராக உள்ளனர்.

ஜனவரி 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை சைனா டவுன் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும்.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் விழா கால சந்தைகள்,அழகிய கூண்டு விளக்குகள், கண்ணை பறிக்கும் அலங்காரங்கள், மனதுக்கு இதமான கலை படைப்புகள் என பல்வேறு அம்சங்களை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வரும் ஆண்டு மிகவும் மகிழ்ச்சி நிறைந்த வருடமாக அமையும் என்ற நம்பிக்கையை இந்த புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் பிரதிபலிக்கும்.