சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீனா நாட்டவர்!! தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கும் அமெரிக்கா!! ஏன்?

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீனா நாட்டவர்!! தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கும் அமெரிக்கா!! ஏன்?

சிங்கப்பூர்: மால்வேர் என்பது கணினி சம்பந்தப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும். இது ஒருவகை கணினி வைரஸ். இது கணினியின் செயல்பாட்டை கெடுக்கவும் முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது.

இவை கணினியில் உள்ள முக்கிய விவரங்களை சேகரிப்பதற்காகவும் ஒருவரின் அனுமதி இன்றி அவர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள். இது ஒருவரின் விவரங்களை மற்றவருக்கு அனுப்பி கொண்டு இருக்கும். மால்வேர் வைரஸ் கணினியில் இருக்கும் போது அதன் வேகமும் செயல்படும் திறனும் குறைவாக இருக்கும்.

மால்வேர் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மென்பொருளை உருவாக்கி பயன்படுத்தியதாக சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் சீன நாட்டவர் ஒருவர் கைதாகி உள்ளார்.

அவர் அந்த மென்பொருளை பயன்படுத்தி இணைய ஊடுருவல் மற்றும் பெரிய அளவிலான மோசடி வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரது பெயர் வாங் யுன்ஹெ என்றும் 35 வயது மதிக்கத்தக்க அந்த நபரை அவரது சிங்கப்பூர் இல்லத்தில் வைத்து கைது செய்தது சிங்கப்பூர் காவல்துறை.

அமெரிக்க இணைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக அவரை மே 24 அன்று போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளியை தன்னிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.CNA கேட்ட கேள்விகளுக்கு பதலளித்தப் போது இவ்வாறு காவல்துறை கூறியது.

அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே குற்றவாளியை திரும்பப்பெறும் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.

இது போன்று வைரஸ்களை பயன்படுத்தி உலகெங்கிலும் இணையதளத்தில் திருட்டு வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.நாம் அதில் பாதுகாப்பாக இருக்க மொபைல் எண்ணிற்கு வரும் தேவையில்லாத லிங்க் போன்றவற்றை கிளிக் செய்யாமலும், சுய விபரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமலும் இருக்க வேண்டும்.