சிங்கப்பூரில் திரும்பப் பெறப்படும் சீனா தயாரிப்பு Walnut!!
சிங்கப்பூரில் இரண்டு xiyuguoyuan xinjiang paper roasted walnut தயாரிப்புகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.அதில் சைக்லேமேட் மற்றும் அதிகளவு அசெசல்பேம் கே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவை செயற்கை இனிப்புகளாக உணவு சேர்க்கைகள் மற்றும் Canned fruits போன்ற சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது என்று கூறியது.
எனினும் வால்நட் மற்றும் பிற நாட்டு விதை பொருட்களில் சைக்லேமேட்டைப் பயன்படுத்த தற்போது அனுமதியில்லை.
அவை சீனாவில் தயாரிக்கப்படுகிறது. இவை 500 கிராம் பாக்கெட் மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளில் இருக்கும். SFA இந்த தயாரிப்புகளை திரும்ப பெறுமாறு hong Xin da என்ற இறக்குமதியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை சாப்பிடுவதால் உடனடி உடல் நலக் குறைவு இல்லை என்றாலும் இவற்றை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். சிங்கப்பூரில் பருப்புகள் மற்றும் விதைகள் தயாரிப்புகளை சோதனைகள் நடத்தி வருவதாக SFA கூறியது.
சைக்லேமேட் போன்ற அதிக அளவு இனிப்புகள் உள்ள தயாரிப்புகளை திரும்ப பெற ஆரம்பித்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg