சிங்கப்பூரில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்தி வாடகைக்கு கார்கள் எடுத்துக் கொள்வார்கள். எப்பொழுதும் விடுமுறை காலத்தின் போது அதிகமான கார்கள் வாடகைக்கு எடுக்கப்படும்.
இந்த ஆண்டு சீனா புத்தாண்டு விடுமுறை காலத்தில் வாடகைக் கார் நிறுவனங்களின் வியாபாரம் அதிகரித்துள்ளது. வியாபாரம் அதிகரித்து இருந்தாலும் வர்த்தகங்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது.
ஒரு சில நிறுவனங்கள் வாடகை எடுப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வாகனங்கள் இல்லை என்று கூறுகின்றனர்.
Ace Drive வாடகை கார் நிறுவனத்திடம் 240 வாகனங்கள் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால்,இவை அனைத்தும் சீனப் புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே முற்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்பொழுதும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வாகனங்களை வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஐந்தில் மூன்று கார்களை வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்நிறுவனம் தெரிவித்தது.
Getgo வாடகைக் கார் என்ற நிறுவனத்திற்கும் இதேநிலை தான். அவர்களிடம் 2000 கார்கள் இருப்பதாக தெரிவித்தனர். செயலியை பயன்படுத்தி ஐந்து நாள் வரை கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்தது. அனைத்து வாகனங்களும் சீன புத்தாண்டு முதல் நாள் அன்றே வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து Getgo நிறுவனம் 2030-ஆம் ஆண்டிற்குள் தன்னிடம் உள்ள வாடகைக் கார்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினர். அதாவது எண்ணிக்கையை 10,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.