சீனா புத்தாண்டுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் தான் இருக்கிறது. சிங்கப்பூரில் சீனா புத்தாண்டைக் கொண்டாட தயாராகக் கொண்டு இருக்கிறது. இதனிடையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் பொருள்களின் விலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் அவர்களுடைய சேவைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பபடும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு சிலர் இதனை விழாக்கால வாடிக்கை என்று கூறினர். இன்னும் ஒரு சிலர் வர்த்தகத்தில் நீண்டகால விடுமுறையால் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்ய உதவும் என்று கூறினர்.கிருமித் தொற்று பரவல் காரணமாக எல்லைகள் மூடப்பட்டிருந்தது. அதற்கு பல கட்டுப்பாடுகளும் விதித்து இருந்தனர். தற்போது, கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது. இதனால் ஊழியர்கள் வெளிநாட்டிற்கு பணிப்புரிய செல்கின்றனர். இதனை தடுக்கும் நோக்கிலும், கூடுதல் ஊழியர்களுக்காகவே விலை மாற்றம் என்று சில நிறுவனங்கள் கூறுகிறது. சீனா புத்தாண்டு வருவதற்கு முன்னரே நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்திற்கு 15வெள்ளி வரை விதிக்கப்பட்டுள்ளது.