வெள்ளக்காடாக மாறிய சீனா!! சிக்கி தவிக்கும் மக்கள்!!
சீனா கடந்த சில மாதங்களாக கடுமையான கனமழை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மத்திய ஹூனானில் ஜூன் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 5 பேர், நிலச்சரிவின் காரணமாக 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு குவடாங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஜூன் மாதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை3ம் தேதி அன்று கிழக்கு சீனாவில் பெய்த மழையால் யாங்சே மற்றும் பிற ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுமார் கால் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறப்பட்டுள்ளனர் என மாநில செய்தி ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளது.
அன்ஹீய் மாகாணத்தில் வெள்ளத்தால் 9,91,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜுலை2ம் தேதி அன்று பிற்பகலில் 2,42,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் மாலை 4 மணியளவில் அன்ஹீய் மாநிலத்தில் உள்ள 7 நகரங்களில் 36 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிக நீளமான நதி என்றழைக்கப்படும் யாங்சே அதன் அளவுகளைத் தாண்டி உயர்ந்து வருகிறது.
மேலும் கனமழை காரணமாக சுமார் 20 ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.
அன்ஹீய்,சீன்ஹீவாவின் யாங்சியில் உள்ள அணைகளை கண்காணிக்க பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
Follow us on : click here