ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!!
சீனாவில் பிறப்பு விகிதம் குறைவது, சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பது மற்றும் வயதான மக்கள் தொகை போன்றவற்றின் விளைவாக நாட்டின் ஊழியரணி குறைந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்த உள்ளது.
ஆண்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும். தொழில்துறையில் வேலை பார்க்கும் பெண்களின் ஓய்வு வயது 50 இல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும்.
மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 55 இல் இருந்து 58 ஆக உயர்த்தப்படும்.
உத்தியோகபூர்வ ஓய்வு வயதிற்கு முன் ஓய்வு பெற அனுமதிக்கப்படாது.
குறைந்த ஓய்வு வயதை உடைய நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here