சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்?

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்?

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அந்நாடு அவ்வப்போது புது புது முயற்சிகளை எடுத்து வருகிறது.குழைந்தை பெற்று கொள்வதில் ஏன் எதனால் பயம் என்பதைக் கண்டறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் 30,000 பேரை உட்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம்,பயம் போன்ற உணர்வுகள் ஆராயப்படும் .அது மட்டும் இல்லாமல் பெண்கள் கருவுறுதலுக்கான ஆதரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

2023-ஆம் ஆண்டில் சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்ததை அடுத்து பெய்ஜிங் மக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.