சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களில் காயமடைந்த அல்லது உயிரிழந்த சிறார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறை, சட்டமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.கடந்த 2018 க்கும் 2021 க்கும் இடையில் நடந்த டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களால் சிறார்களுக்கு ஏற்பட்ட விபத்து எண்ணிக்கைக் குறித்து ஆய்வு செய்தது.
அதில் சிறார்களின் காயமடைந்தோர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த டாக்ஸி விபத்தில் காயமடைந்த சிறார்களின் எண்ணிக்கை 28 ஆகும். கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 13 ஆக குறைந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டில் 8 ஆகவும்,2021-ஆம் ஆண்டு 7 ஆகவும் குறைந்தது.இவ்வருடம் 2023-ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து டாக்ஸி விபத்தில் 6 சிறார்கள் மட்டுமே காயம் அடைந்துள்ளனர்.
இதேபோல் தனியார் வாடகைக் கார்கள் விபத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த சிறார்களின் எண்ணிக்கையை கணக்கிட்டது.கடந்த 2018-ஆம் ஆண்டு தனியார் வாடகைக் கார்களில் காயமடைந்த சிறார்களின் எண்ணிக்கை 21 ஆகும். இருப்பினும்,கடந்த 2019-ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.பின்னர்,2020-ஆம் ஆண்டு 9 ஆகவும்,2021-ஆம் ஆண்டு 4 ஆக குறைந்துள்ளது.இவ்வருடம் 2022-ஆம் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் வரை 4 பேர் காயப்பட்டிருப்பதாக கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினரான லூயிஸ் இங் கொக் குவாங்,“கடந்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களால் நடந்த சிறார்களின் விபத்து குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் சிறார்களின் காயமடைந்தோர் அல்லது உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலமாக டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களில் காயமடைந்த அல்லது உயிரிழந்த எண்ணிக்கை குறித்த அறிக்கையை உள்துறை, சட்ட அமைச்சர் க. சண்முகம் வெளியிட்டார்.