தமிழக சினிமாவில் கவிஞர் என்றால் அது வைரமுத்து தான் என்று சொல்லும் அளவிற்கு தன் பாடல் வரிகளால் தமிழக மக்களை ஈர்த்தவர் வைரமுத்து. அது மட்டுமல்லாமல் தனது பாடல்களுக்காக அவர் பல தேசிய விருதுகளை வாங்கி குவித்து இருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்ட பாடகி தான் சின்மயி.
‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்மயி பரபரப்பாக கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டை சாட்டினார். இதனால் சோசியல் மீடியாவில் சின்மயிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளும் மற்றும் அவருக்கு ஆதரவாக பலரும் பேசினர்.
வைரமுத்துவிற்கும், பாடகி சின்மயிக்கும் இருக்கும் இந்த பிரச்சனையானது ஓய்ந்த பாடு இல்லை. அடிக்கடி ட்விட்டரில் வைரமுத்துவினை மறைமுகமாக தாக்கி வருவது சின்மைக்கு வழக்கமான விஷயம்தான். வைரமுத்துவை யார் சோசியல் மீடியாவில் பாராட்டினாலும் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஜூலை 13ஆம் தேதி பிறந்தநாள் காணும் வைரமுத்துவிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறினார். மேலும் அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் முதலமைச்சராக அவர்கள் பகிர்ந்து சில வசனங்கள் மூலம் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றார். அதைப் பார்த்து கடுப்பான சின்மயி பெண்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ள ஒரு நபரை முதலமைச்சர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறது கொடுமையாக இருக்கின்றது என்று பகிரகமாக அறிவித்துள்ளார்.
கட்சியின் மறைவில் மறைந்து கொண்டு இவர் பகிரங்கமாக குற்றங்கள் செய்து வந்தாலும் அவரை எதிர்ப்பதற்கு இங்கு யாரும் இல்லை என்றும், நீண்ட காலமாக நான் நியாயத்திற்காக போராடி வருகின்றேன். எனக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் தன் குமுறல்களை கொட்டியுள்ளார்.
இவர்களின் செயலால் என் வயிறு பற்றி எரிகின்றது. இங்கு பெண்களின் உணர்வு,கல்வி, விழிப்புணர்வு போன்ற எல்லாமே பூஜ்ஜியமாக உள்ளது என்று விமர்சனத்தை வைத்துள்ள சின்மயி, இங்கு நீதி என்பது கேள்விக்குறியாகி உள்ளது என்று குற்றம் சாடியுள்ளார்.