மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி?
தென்கொரியாவிற்கு சொந்தமான ரசாயனக் கப்பல் ஒன்று ஜப்பானின் கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
டேங்கர் கப்பலில் 11 பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் ஒன்பது பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் டேங்கரில் அக்ரிலிக் அமிலம் இருந்ததாகவும், ஆனால் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.