கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!!
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் 39 ஊழியர்கள் ரசாயன கசிவு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியா அவசர சேவை அதிகாரி ஒருவர் கூறினார்.
மெத்தில் மெர்காப்டன் எனும் ரசாயன கசிவு கசிந்ததாக கூறப்படுகிறது.அது விமான எரிபொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
ரசாயன கசிவினால் குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகினர்.
பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 14 பேர் ஆகாயப் பேரிடர் பிரிவில் சிகிச்சையிலும் மற்றும் ஒருவர் மருத்துவமனையிலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோலிய வாயுவுடன் மெத்தில் மெர்காப்டன் வாயுவை சேர்த்தால் அழுகிய முட்டைகோஸ் போன்ற வாசனை வரும்.
இதன் காரணமாக விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here