சிங்கப்பூரில் முதியோர்களின் நலன்களில் அக்கறை காட்டும் தொண்டு நிறுவனங்கள்!!

சிங்கப்பூரில் முதியோர்களின் நலன்களில் அக்கறை காட்டும் தொண்டு நிறுவனங்கள்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பராமரிப்பு இல்லத்தில் உள்ள முதியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு அவர்களின் உடல் நலத்திற்கு ஏற்ப சத்தான மற்றும் ஆரோக்கியமான முறையில் உணவு அளிப்பது குறித்து தொண்டு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

அதனால் அமைப்பு மக்களிடையே ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

லயன்ஸ் பிஃப்ரென்டர்ஸ் என்ற தொண்டு நிறுவனம், விழிப்புணர்வுக்கு பின்னர் ஆரோக்கியமற்ற உணவை நன்கொடையாக கொடுக்கும் போக்கு 30 சதவீதம் குறைந்துள்ளதாக கூறியது.

நன்கொடையாளர்கள் உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த சில உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்கும் பொழுது சில சமயங்களில் அது வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது.

வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற நன்கு சமைத்த உணவுகள் கொடுப்பது அவசியம்.

மேலும் முதியவர்கள் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

முதியவர்களின் உணவுப் பழக்கத்தை படிப்படியாக மாற்ற முயற்சி செய்யலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

உணவகங்களிலிருந்து நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை இல்லத்திற்கு வருகின்றது.

சமூகம் தொடர்ந்து ஆரோக்கியமான சமைக்கும் பொருட்களை வழங்கினால் தொடர்ந்து சேவை செய்ய உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.