மே மாதம் 2020 – ல் மேம்பாட்டு பணிக்காக Changi விமானநிலையத்தின் டெர்மினல் 2 மூடப்பட்டது.இருப்பினும் கோவிட் – 19 காலக்கட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் தற்காலிகமாக தொடங்கப்பட்டது.ஆனால் T2 முழுமையாக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே முழுமையாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கை கொஞ்சும் அழகோடு நேற்று நவம்பர் 1-ஆம் தேதி அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
முன்னதை விட தற்போது 16 விமான நிறுவனங்கள் செயல்படும் வகையில் பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ளது. இதனை அடுத்து டெர்மினல் – 5 திட்டமும் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் T2 – வின் சிறப்பம்சங்களாக: விரிவுப்படுத்தப்பட்ட புறப்பாடு நிலையம் , அதிகரிக்கப்பட்ட தானியங்கு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய சிறப்பம்சமாக மற்ற டெர்மினல்களை ஒப்பிடும் போது மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தானியங்கு பாதையைக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அத்தோடு முற்றிலுமாக இயற்கையோடு டிஜிட்டல் அழகை கொண்ட இந்த T 2 , மக்களை வியந்து பார்க்க வைக்கும் முறையிலான காத்திருப்பு மண்டபத்தையும் கொண்டுள்ளது.
மேலும் சிறப்பம்சமாக ரோபோக்கள் மூலம் ஃபிரீ ஒயின்கள் வழங்குதல் மற்றும் வித்தியாசமான உணவுகள் அடங்கிய தரம் வாய்ந்த பிரபல உணவு நிறுவனங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
டிஜிட்டல் நீர்வீழ்ச்சி , கண்ணாடியால் அமைக்கப்பட்ட மீன் குளம் கொண்ட பாதை என சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமின்றி இத்தகைய அமைப்பு மக்களை ஒரு இயற்கை பூங்காவில் இருப்பது போல நினைக்க தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மேம்பாட்டு பணியால் , விமான போக்குவரத்து துறையானது சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்திடும் வகையில் அமையும் என தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் Teo Chee Hean அவர்கள் T 2 திறப்பு விழாவின் போது கூறினார்.