நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் தேசிய சேவையாளர்களுக்காக அனுமதி விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது, பல தேசிய சேவையாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர்களுடைய அனுமதி மாதம் தளரத்தப் படவிருக்கிறது.
தற்போது தேசிய சேவையாளர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டிற்கு செல்வோர் அனுமதி பெற வேண்டும்.
இனி, தேசிய சேவையாளர்கள் 12 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டிற்கு செல்வோர் அனுமதி பெற வேண்டி இருக்கும். அவர்களின் அனுமதி விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது.
இதனை தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் Heng Chee How அறிவித்தார். இந்த புதிய அனுமதி விதிமுறை மாற்றத்தால் ஆயுதப் படையினர் தயார் நிலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார்.
அனுமதி இன்றி வெளிநாட்டிற்கு செல்வோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். அவர்களுக்கு 10,000 வெள்ளி விதிக்கப்படலாம். அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.