S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!!

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!!

சிங்கப்பூரில் S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளம் 3300 வெள்ளியாக அதிகரிக்கப்படவுள்ளது.இந்த புதிய நடைமுறை இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.

ஊழியர்களின் வயதுக்கு ஏற்ப தகுதிபெறும் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கும்.

s pass அனுமதிக்கான தகுதிபெறும் சம்பளம் பெரும்பாலான துறைகளில் $3150 வெள்ளியாக இருந்தது இனி $3300 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிதித்துறையில் $3650 வெள்ளியாக இருந்தது இனி $3800 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை வேலை அனுமதி அட்டைக்கான தகுதிபெறும் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரணியின் தரத்தை மேம்படுவதற்காக தகுதிச் சம்பளமும் அதிகரிக்கப்படுவதாக டாக்டர் டான் கூறினார்.

உயர்தர வெளிநாட்டு நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு COMPASS கட்டமைப்பு எனும் புள்ளிகள் அடிப்படையிலான திட்டம் அமலில் உள்ளதை எடுத்துக்காட்டாக கூறினார்.

மேல்நிலை வேலை அனுமதி அட்டை விண்ணப்பங்களுக்கு COMPASS கட்டமைப்பு பொருந்தும்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதே நாட்டிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போக்கு 7 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று டாக்டர் டான் கூறினார்.

வெளிநாட்டவர்களை பெரிதும் சார்ந்திருக்கும் நிறுவனங்களில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் 15 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் உள்ளூர்வாசிகளுக்கு 4000 க்கும் மேற்பட்ட உயர்நிலை வேலைகள் உருவாகியதாக டாக்டர் கூறினார்.