சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!!

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்...!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி...!!!

எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இம்மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. 50 ஓவர்களில் நடைபெறும் போட்டி குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் உள்ளன.

குரூப் பி பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடரில் முதல் சுற்று தவிர அனைத்து போட்டிகளும் நாக் அவுட் முறையில் நடைபெறும். அதாவது ஒரு போட்டியில் தோற்றாலும் இரண்டாவது வாய்ப்பு இல்லை.

15 போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 1ம் தேதி முடிவடைகிறது. குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு தனித்தனி அரையிறுதிகள் நடைபெறும். முதல் நான்கு இடம் பிடித்த அணிகள் பங்கேற்கும் போட்டியானது மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் இந்தியாவுக்குப் போட்டியாகக் கருதப்படும் ஒரே அணி ஆஸ்திரேலியாதான்.

இப்போது அவர்களும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அதனால் இந்தத் தொடர் இந்தியாவுக்கு சாதகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் 50 ஓவர் போட்டிக்கு திரும்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மூன்று நட்சத்திர வீரர்கள் தொடரில் பங்கேற்கவில்லை.ஆல்-ரவுண்டர் மிச்சல் மார்ஷ், கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில் வுட் ஆகியோர் காயம் காரணமாக தொடரை இழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்துள்ளது.புதிய கேப்டனாக ஹெட் அல்லது ஸ்மித் அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது.