சிங்கப்பூரில் தன்னார்வர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விழா!!
சிங்கப்பூர்: சமூக மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சகம் தன்னார்வ தொண்டூழியர் விழாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் மூலம் மக்கள் தொண்டு செய்வதற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.
தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு அவர்களின் பங்களிப்பை அளிக்கலாம்.
சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தின் தொண்டு திட்ட வாய்ப்புகள் தனிநபரின் திறன், ஆர்வம் மற்றும் நேர ஒதுக்கீட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபரும் தங்களால் இயன்ற வழிகளில் சுமூகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பங்களிப்பதை அமைச்சகம் சாத்தியமாக்கியுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதற்கும், பாதிக்கப்படக்கூடியவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், தேவைப்படுபவர்களை அணுகுவதற்கும், குடும்பங்களை வலுப்படுத்துவதற்கும், உள்ளடக்கிய மற்றும் நியாயமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் இவை வழிசெய்கின்றன.இந்த வழிகள் பரந்த அளவிலான சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கியது.
இது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தன்னார்வத் தொண்டு சக்தி வாய்ந்தது, ஏனெனில் அது நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பல்வேறு பின்னணியில் உள்ளவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.அது நம்மிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கிறது.
அது நம்மை ஒன்றுபட்ட சமூகமாகச் செயல்பட வைப்பதோடு இது நம்மை வலிமையான மற்றும் ஒற்றுமையான மக்களாக ஆக்குகிறது. சமூக மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சகம் தன்னார்வ தொண்டூழியர் விழாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் தன்னார்வத் தொண்டு செய்வதன் மூலம் சிறந்த சிங்கப்பூரை உருவாக்க முடியும்” என்றார் திரு வோங்.
Follow us on : click here