மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும்!

சிங்கப்பூரில் மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.மத்திய சேமநிதிக் கணக்குகள் வைத்து இருக்கும் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும்.

மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்பட்டதும் அவர்களுடைய மத்திய சேமநிதி திட்டங்களில் பங்கேற்புப் முடிவுக்கு வரும். அவர்களுடைய தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு தொகை மாற்றப்படும்.

2024-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லாதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டது.

அவர்களுடைய கணக்குகளை மூடவில்லை என்றால் இயல்பாகவே மூடப்படும்.

அவற்றில் மீதம் உள்ள தொகைக்கு வட்டி அளிக்கப்படாது என்றும் தெரிவித்தது.

மீதம் உள்ள தொகைகளை எந்த நேரத்திலும் தனிப்பட்ட வங்கிக் கண்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இந்த மாதத்திலிருந்து மத்திய சேமநிதி கழகம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் என்று அறிவித்தது.