செஞ்சிலுவை சங்கத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இந்த ஆண்டு தனது 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
இந்த நிகழ்ச்சியை நவம்பர் 2ஆம் தேதி (சனிக்கிழமை) ஷாங்க்ரிலா சிங்கப்பூர், ஐலண்ட் பால்ரூமில் நடத்தியது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர் தர்மன் சண்முகரத்தினம் இருவழித் தொடர்பாடல் காட்சியகத்தை திறந்து வைத்தார்.
இதில், சங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால முயற்சிகள் குறித்து பொதுமக்கள் மேலும் அறியலாம்.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (SRC) அகாடமியில் முதலுதவித் திறன்களைக் கற்றுக்கொண்ட திருமதி ஹான்,மாரடைப்பில் இருந்த ஒருவருக்கு இதய நுரையீரல் புத்துயிர் அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.
இந்த வீரச் செயலுக்காக அவருக்கு SRC Lifesaver விருது வழங்கப்பட்டது.
நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.
First Aid On Wheels திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் பயிற்சித் திட்டங்களில் AI தொழில்நுட்பத்தை இணைத்தல் ஆகியவை குறித்து பேசப்பட்டன.
சமுதாயத்தில் தேவைப்படுபவர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களும் உள்ளன.
அதிக முதியவர்கள் தொண்டு செய்வதில் ஈடுபட வேண்டும் என்று கூறியது.
மேலும் அதை ஊக்குவிப்பதற்காக சங்கம் ஒரு குழுவை ஏற்பாடு செய்யும் என்று தெரிவித்தது.
நிகழ்ச்சியில் தன்னலமின்றி பிறருக்கு உதவிய 200க்கும் மேற்பட்டோர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
Follow us on : click here