உலக செய்திகள்

அறிமுகம் கண்ட தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்……

தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயிலை இந்தோனேஷியா ஆகஸ்ட் 2-ஆம் தேதி திங்கட்கிழமையன்று அறிமுகப்படுத்தியது. சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிலான Jakarta மற்றும் Bandung பகுதிகளுக்கு இடையே இந்த ரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். Whoosh எனப்படும் இந்த அதிவேக ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவித்தனர். இந்த அதிவேக ரயிலில் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 600 பேர் பயணிக்க முடியும் என்று கூறினர். இந்த அதிவேக ரயில் சேவை …

அறிமுகம் கண்ட தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்…… Read More »

மலேசியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை…..மலேசியா பிரதமர் எச்சரிக்கை….

அரிசி ஏற்றுமதியில் இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்தது.இந்த தாக்கம் மலேசியாவை பாதித்துள்ளது. மலேசியாவில் விலைவாசி உயர்ந்து வருகிறது.பற்றாக்குறை சூழ்நிலையும் நிலவி வருகிறது. மலேசியா தனது அரிசி தேவையில் 38 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. தட்டுப்பாடுகள் ஏற்படும் சூழ்நிலையால் பொதுமக்கள் அரிசியை பாதுகாத்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. அதிக அளவில் அரிசியை கொள்முதல் செய்து அதனை சேமிப்பதால் விலை உயர்கிறது என்று நம்பப்படுகிறது. அரிசி கிடைக்காமல் மக்கள் சிரமப்படும் நேரத்தில் அதனை பத்துக்கல் பணியில் ஈடுபடுவோர் மீது …

மலேசியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை…..மலேசியா பிரதமர் எச்சரிக்கை…. Read More »

கருணை கொலை செய்யப்பட்ட கரடி…..ஏன்?

Alberta-வின் Banff தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக Parks Canada அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் கரடியை கருணை கொலை செய்தனர். சம்பவம் நடந்த பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று Parks Canada தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை கவரும் இந்த பூங்கா, Grizzly மற்றும் கருப்பு கரடிகளுக்கு தாயகமாக உள்ளது.

மீன் பிடிக்க சென்றவர்களின் படகில் மோதிய திமிங்கலம்….. ஒருவர் பலி…..

ஆஸ்திரேலியாவில், இருவர் படகில் மீன் பிடிக்க சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு திமிங்கலம் அவர்களது படகில் மோதியது. படகு கவிழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் காயமடைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். திமிங்கலம் படகின் மிக அருகில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் பரந்த கடற்கரையில் 10 பெரிய மற்றும் 20 சிறிய வகை திமிங்கலங்கள் உள்ளன என்றும், இப்பகுதியில் …

மீன் பிடிக்க சென்றவர்களின் படகில் மோதிய திமிங்கலம்….. ஒருவர் பலி….. Read More »

கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்…….

பாகிஸ்தானின் மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட Balochistan பகுதியில், வெள்ளிக்கிழமை நடந்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Balochistan-ல் உள்ள ஒரு மசூதிக்கு அருகே முதல் தாக்குதலும், Khyber Pakhtunkhwa பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இரண்டாவது தாக்குதலும் நடத்தப்பட்டதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று அதிகாரிகள் கூறினார்கள். காயமடைந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அங்குள்ள …

கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்……. Read More »

சிங்கம் தாக்கியதில் உயிரிழந்த பராமரிப்பாளர்….. உணவு வைக்க சென்ற போது நேர்ந்த கொடுமை…..

ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் உள்ள Tohoku Safari உயிரியல் பூங்காவில் பணிபுரியும், 53 வயதான விலங்குகளின் பராமரிப்பாளர் Kenichi Kato என்பவரை ஒரு சிங்கம் தாக்கியதில், அவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். வியாழக்கிழமை பிற்பகல் சிங்கத்தின் கூண்டுக்குள், அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கசிந்து மயங்கி கிடந்தார் என்று காவல்துறையினர் கூறினர். பூங்காவின் மூத்த அதிகாரி, Kato உணவை பயன்படுத்தி சிங்கத்தை கூண்டுக்குள் இழுக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். மேலும், கதவை …

சிங்கம் தாக்கியதில் உயிரிழந்த பராமரிப்பாளர்….. உணவு வைக்க சென்ற போது நேர்ந்த கொடுமை….. Read More »

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு……ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழை……

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரே இரவில் ஒரு சில பகுதிகளில் 12 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் 17 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவை எதிர்பார்க்கலாம் என்று நியூயார்க் ஆளுநர் தெரிவித்தார். திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ரயில் நிலையங்கள்,ஸ்ட்ரீட்கள், நெடுஞ்சாலைகள் மூழ்கின. செப்டம்பர் 29-ஆம் தேதி நேற்று La Guardia விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவித்தது. நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அவசரநிலை …

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு……ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழை…… Read More »

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதி….. பலர் உணவு, தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கும் அவலம்…..

வியட்நாமில் மத்திய பகுதிகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் அங்கு வசித்த ஆயிரக்கணக்கனோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. இன்னும் பலர் தண்ணீர், உணவு, மின்சார வசதிகள் இல்லாமல் சிக்கி தவிப்பதாக சொல்லப்படுகிறது. கடும் வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டது. மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. செப்டம்பர் 28-ஆம் தேதி (இன்று) அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக …

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதி….. பலர் உணவு, தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கும் அவலம்….. Read More »

திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்து….. பரிதாபமாக போன உயிர்கள்……

Iraq-ன் Nineveh மாகாணத்தில் உள்ள Hamdaniya மாவட்டத்தில், புதன்கிழமை அன்று நடைபெற்ற திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி இரவு 10:45 மணியளவில் கட்டிடம் தீப்பிடித்ததாகவும், சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்ததாகவும், அந்த இடத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கொண்டாட்டத்தின் போது வெடித்த பட்டாசுகள், இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் …

திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்து….. பரிதாபமாக போன உயிர்கள்…… Read More »

Golf பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து….. ஊழியர்களை மீட்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சோகம்….

தெற்குத் தைவானில் உள்ள golf பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவரை காணவில்லை என்றும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிதறிய உடல் துண்டுகளை அடையாளம் காண கூடுதல் சோதனை தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு முழுவதும் ஏற்பட்ட தீ மற்றும் தொடர் வெடிப்புகளால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர் என்று …

Golf பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து….. ஊழியர்களை மீட்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சோகம்…. Read More »