உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…..தனது குடும்பத்தில் 11 பேரை இழந்து தவிக்கும் முதியவர்…….

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 2400 பேர் உயிரிழந்ததாகவும், 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்தனர். அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஏற்பட்ட இந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இந்த ஆண்டு உலகில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமான ஒன்றாகும். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமானதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், இந்த நிலநடுக்கத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் …

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…..தனது குடும்பத்தில் 11 பேரை இழந்து தவிக்கும் முதியவர்……. Read More »

வியட்நாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்…..நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட மூன்று பேர் பலி……

வடக்கு வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என்றும் பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர். Yen Bai, Thai Nguyen மற்றும் Tuyen Quang மாகாணங்களில் கனமழை பெய்ததால் டஜன் கணக்கான வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக Hanoi-ஐ தளமாகக் கொண்ட பேரிடர் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தெருக்களில் சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து …

வியட்நாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்…..நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட மூன்று பேர் பலி…… Read More »

சிக்கிமில் சாதாரண அளவைவிட இரண்டு மடங்கு அதிமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்…… அண்டை மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள்……

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சாதாரண அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக பெய்த கனமழையைத் தொடர்ந்து Lhonak ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 101 பேரைக் காணவில்லை என்றும், காணாமல் போனவர்களில் 14 ராணுவ வீரர்களும் அடங்குவர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. சிக்கிம் மாநிலத்தில் 25 சடலங்களை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். மற்றும் அதன் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் அடித்து …

சிக்கிமில் சாதாரண அளவைவிட இரண்டு மடங்கு அதிமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்…… அண்டை மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள்…… Read More »

ஹாங்காங்கில் கொய்னு சூறாவளியால் வெள்ளம்……

Koinu சூறாவளியால் ஹாங்காங்கில் கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத மழையால் முடங்கிய நகரம் தற்போது நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கையை விடுத்தது. வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் சிக்கித் தவித்தனர். குவாங்டாங் மாகாணத்தில் மணிக்கு …

ஹாங்காங்கில் கொய்னு சூறாவளியால் வெள்ளம்…… Read More »

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்….. கடலில் எழுந்த சுனாமி அலைகள்….

பசிபிக் பெருங்கடலில் உள்ள Izu தீவுகளில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜப்பான் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எழுந்த சுனாமி அலைகளால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கையை நீக்கியதாக நிபுணர்கள் தெரிவித்தனர். Shimoda-வில் இருந்து 551 கிலோமீட்டர் தெற்கே 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. Hachijojima தீவை 60 சென்டிமீட்டர் அளவிலான சுனாமி அலைகள் தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் மேற்கு கொச்சி மற்றும் தெற்கு Miyazaki மாகாணங்களில் …

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்….. கடலில் எழுந்த சுனாமி அலைகள்…. Read More »

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து……மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்…..

அக்டோபர் 6ஆம் தேதி அன்று (நேற்று) தெற்கு மெக்ஸிகோவில் இடம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். Oaxaca-வையும் அதன் அண்டை மாநிலமான Puebla-வையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இது போன்ற பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2014 …

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து……மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்….. Read More »

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்…… 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவு……

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்னஞ்சல் மூலமாக மணிலாவிலிருந்து பல சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமானங்கள் வெடித்துச் சிதறக் கூடும் என்று மிரட்டல் வந்தது.அது பெரும்பாலும் புரளியாகவே இருக்கக்கூடும் என்றும் விமான போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இருப்பினும் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான மணிலா மற்றும் அதன் 2 பெரிய …

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்…… 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவு…… Read More »

இந்தியாவில் இமயமலை பனிப்பாறை ஏரி ஒன்று உடைப்பு…..100 பேர் காணவில்லை….

கனமழை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கத்தால் 18 பேர் உயிரிழந்ததாகவும், கிட்டத்தட்ட 100 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட மோசமான பேரழிவு இதுவே ஆகும். சிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரி உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இதனால் கிட்டத்தட்ட 22,000 பேரின் வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளப்பெருக்கில் 14 பாலங்கள் …

இந்தியாவில் இமயமலை பனிப்பாறை ஏரி ஒன்று உடைப்பு…..100 பேர் காணவில்லை…. Read More »

மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்….. மாயமான 23 ராணுவ வீரர்களை தேடும் பணியில் சிக்கல்…..

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான Sikkim-ல் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கத்தை அடுத்து 23 ராணுவ வீரர்களை காணவில்லை என்றும், தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிம் தலைநகர் Gangtok-ல் உள்ள சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையும் இந்த வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது. Gangtok-ல் இருந்து 150 கிலோமீட்டர் வடக்கே சீனாவின் எல்லைக்கு …

மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்….. மாயமான 23 ராணுவ வீரர்களை தேடும் பணியில் சிக்கல்….. Read More »

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய பேருந்து……உடல்களை மீட்க சிரமம்பட்ட தீயணைப்பு வீரர்கள்…..

அக்டோபர் 3 ஆம் தேதி (நேற்று) இரவு, வடக்கு இத்தாலியில் வெனிஸ் நகருக்கு அருகே, 40 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த பேருந்து மின்சார கம்பிகளில் மோதி தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், …

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய பேருந்து……உடல்களை மீட்க சிரமம்பட்ட தீயணைப்பு வீரர்கள்….. Read More »