உலக செய்திகள்

ஆன்லைனில் டிக்கெட்டுகள் அறிவிப்பு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ள நிலையில் ஆன்லைனில் டிக்கெட் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருநாள் காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகள் நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபம் காண கொடுக்கப்படும். அடுத்தது 600 ரூபாய்க்கு 1000 டிக்கெட்டுகள் மாலை மகா தீபம் …

ஆன்லைனில் டிக்கெட்டுகள் அறிவிப்பு திருவண்ணாமலையில் Read More »

ரெட் அலர்ட் சபரிமலை

சபரிமலை பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. பக்தர்கள் அந்தப் பாதையில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது முக்கியமாக நிலக்கல்லில் இருந்து பம்பை வழியில் நிலச்சரிவுக்கு அதிக வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை கொண்டு பேரிடர் மீட்பு பணியில் தயார் நிலையில் சபரிமலை உள்ளது.

பெருவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை மம்மி கண்டுபிடிப்பு!!

நவம்பர் 20ஆம் தேதி அன்று தென் அமெரிக்காவின் மேற்கத்திய நாடான பெருவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தைகளின் மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் கூற்றுப்படி இந்த மம்மிகள் 900AD முதல் 1450AD வரை வாழ்ந்த Inca Ychsma கலாச்சாரத்தை சேர்ந்தவை ஆகும். இந்த மம்மிகளின் மண்டை ஓடுகளில் இன்னும் முடி இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கூறினார். மேலும் இந்த மம்மிகளை கண்டெடுத்த இடத்தில் 3500 ஆண்டுகள் பழமையான கோவில் இருந்ததாக அவர் தெரிவித்தார். Ychsma …

பெருவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை மம்மி கண்டுபிடிப்பு!! Read More »

பல நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் முகத்தை காண முடிந்த நெகிழ்ச்சி தருணம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் பத்து நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை முதல் முறையாக கேமரா மூலம் காண முடிந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். மேலும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டதை அடுத்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிருடன் மற்றும் பாதுகாப்பாக இருப்பது உறுதியான பிறகு மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் …

பல நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் முகத்தை காண முடிந்த நெகிழ்ச்சி தருணம்!! Read More »

ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள்!! மீட்கும் முயற்சியில் தீவிரம்!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கப்பாதை இடிந்து விழுந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அங்கு சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க முடியவில்லை என்று மீட்பு படையினர் கூறினர். சுரங்கப் பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு சிறிய குழாய் மூலம் ஏற்கனவே தண்ணீர், உலர் உணவுப் பொருட்கள், ஆக்ஸிஜன், மருந்து பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு பெரிய குழாய் மூலம் சமைத்த உணவை வழங்கவும் முயற்சி செய்து …

ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள்!! மீட்கும் முயற்சியில் தீவிரம்!! Read More »

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!!வெள்ளத்தால் மூழ்கியுள்ள நாடு!!

சமீபத்திய வாரங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கென்யாவின் பல்வேறு பகுதிகளில் 46 பேர் உட்பட டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு கென்யாவின் துணை ஜனாதிபதி அறிவுறுத்தினார். நிலச்சரிவு ஏற்பட்டதன் விளைவாக சரக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா ரயில்வே தெரிவித்துள்ளது. கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் …

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!!வெள்ளத்தால் மூழ்கியுள்ள நாடு!! Read More »

ஒரு வார நாட்களாக சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி தவிக்கும் அந்த 41 தொழிலாளர்களின் நிலைமை என்ன?? மேலும் மீட்பு பணி நிறுத்தப்பட காரணமும் அதன் பின்னணியும்!!

இந்தியா உள்ள உத்தரகாண்டில் Silkyara மற்றும் Barkot இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12 அன்று விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் விபத்து நடந்த சுரங்கபாதையிலேயே சிக்கியும் அவர்களை இன்றளவிலும் மீட்க இயலவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. தீபாவளி திருநாளில் நாடே ஒளிமயமாக இருந்த அந்த நேரத்தில் இந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் இருளில் சிக்கி தவித்தது கவலைக்குறியதாக உள்ளது. மேலும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று …

ஒரு வார நாட்களாக சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி தவிக்கும் அந்த 41 தொழிலாளர்களின் நிலைமை என்ன?? மேலும் மீட்பு பணி நிறுத்தப்பட காரணமும் அதன் பின்னணியும்!! Read More »

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக பதிவான நிலையில் தற்போது 6ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இருவரை காணவில்லை என்றும், அவர்களை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 60 கிலோமீட்டர் ஆழத்தில் Mindanao தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டு பெரிய மால்கள் மற்றும் ஒரு பள்ளியின் கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் சிறிய அளவில் …

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

உத்தரவை மீறிய விவசாயிகள்!! விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

நவம்பர் 16ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 509 ஆக பதிவானது. இது மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டது. புதன்கிழமை அன்று ஏற்பட்ட பண்ணைத் தீயால் நிலைமை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் காற்று மிகவும் மாசுடைந்துஇருப்பதால்பயிர் எச்சங்களை எரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் இந்த தடையை மீறி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் செயல்பட்டுள்ளனர். சுமார் 2500க்கும் மேற்பட்ட பண்ணையில் பயிர் எச்சங்களை எரித்துள்ளனர். இதனால் நச்சுப் புகையானது காற்றில் …

உத்தரவை மீறிய விவசாயிகள்!! விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? Read More »

சீனாவில் நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!!26 பேர் பலி!!

சீனாவின் Shanxi மாகாணத்தில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் நவம்பர் 16-ஆம் தேதி (நேற்று) காலை 6:50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.மருத்துவமனைக்கு டஜன் கணக்கானோர் கொண்டு செல்லப்பட்டனர் என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தது. இந்த கட்டிடம் Yongju நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடத்திலிருந்து 63 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 51 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தன. தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை …

சீனாவில் நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!!26 பேர் பலி!! Read More »