சிங்கப்பூரில் உள்ள முன்னாள் குற்றவாளிகளுக்கு இன்னும் ஆதரவு வழங்கப் பட வேண்டும்!
சிங்கப்பூரில் உள்ள முன்னாள் குற்றவாளிகளுக்கு இன்னும் ஆதரவு வழங்கப் பட வேண்டும். அவர்களுக்கு வீட்டுச் சூழல் ஆதரவாக இருக்கும் என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர் கூறினார். வீட்டுச் சூழல் என்பது ஒருவருடைய இயல்பை வடிவமைத்து,அவர்களுக்கு நம்பிக்கை அளித்து,ஆதரவளிப்பது. இது பெரிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். இது போன்ற வீட்டுச் சூழல்கள் அமையாதவர்களிடம் சமூகப் பிரச்சினைகள் தோன்றும் என்றும் குறிப்பிட்டார்.