ஆசியா அளவில் நடைபெற உள்ள காற்பந்து போட்டியில் ஏன் சிங்கப்பூர் காற்பந்து அணி பங்கேற்க போவதில்லை?
இவ்வாண்டு சீனாவில் உள்ள Hangzhou நகரில் நடக்கவிருக்கும் ஆசியா அளவிலான போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி போட்டியிட போவதில்லை என்று சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தெரிவித்திருக்கிறது. அந்த போட்டி 22 வயதுக்குகீழ் உள்ளவர்களுக்கு நடத்தப்படுகிறது.தென்கிழக்காசியாவில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி தோல்வியைக் கண்டது .அதோடு பல்வேறு போட்டிகள் திட்டமிட்டிருப்பதும் காரணங்களாக கூறப்பட்டது. கடந்த வாரம் 10 பரிந்துரைகளை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் வெளியிட்டது. அவை சிங்கப்பூர் அணி சிறப்பாக செயல்பட்டு விளையாடுவதற்கான பரிந்துரைகளாகும் […]