உலக செய்திகள்

சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் காயமடைந்த பெண்!!நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!வழக்கில் யாருக்கு வெற்றி?

அமெரிக்காவில் சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் Tammy Reese என்ற பெண் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார். இச்சம்பவத்தை அடுத்து அதனை தயாரித்த நிறுவனத்தின்மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு பென்சில்வேனியா மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. பணிபுரியும் இடத்தில் உள்ள சமையலறையில் ஸ்ப்ரே திடீரென வெடித்தது. அங்கு இருந்த Tammy Reese இன் உடலில் தீ பற்றி கொண்டது. அவரின் தலை, முகம், கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அந்த பெண்ணிற்கு உரிய இழப்பீடை Conagra …

சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் காயமடைந்த பெண்!!நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!வழக்கில் யாருக்கு வெற்றி? Read More »

200 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து!!

இந்தோனேசியாவில் அதிகப்படியான நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி(CEO) மற்றும் மூன்று அதிகாரிகளுக்கு, இந்தோனேசிய நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நவம்பர் 1-ஆம் தேதி (நேற்று) தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பலத்த மழை, காற்றால் இடிந்து விழுந்த மாலின் மேற்கூரை…… அலறி அடித்து ஓடிய மக்கள்……

அக்டோபர் 28ஆம் தேதி அன்று மதியம் மூன்று மணியளவில், மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரில் உள்ள Megah Rise மாலின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு மாலில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்றனர். இச்சம்பவத்தின் போது அப்பகுதியில் பலத்த காற்று வீசியதாகவும், கனமழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. …

பலத்த மழை, காற்றால் இடிந்து விழுந்த மாலின் மேற்கூரை…… அலறி அடித்து ஓடிய மக்கள்…… Read More »

தன்னை மனித வெடிகுண்டு என்று மிரட்டிய பெண்!! தன்னைத் தானே வெடிக்க செய்ய போவதாக மிரட்டல்!!!

அக்டோபர் 31ஆம் தேதி அன்று பாரிஸில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு இஸ்லாமிய பெண் தாக்குதல் மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் தெரிந்த உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்தப் பெண் தான் ஒரு மனித வெடிகுண்டு என்றும், தன்னைத்தானே வெடிக்கச் செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் அந்தப் பெண்ணை நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் படியும், அமைதியாக இருக்கும் படியும் உத்தரவிட்டனர். ஆனால் அந்தப் பெண் காவல்துறையினரின் உத்தரவுகளை ஏற்க …

தன்னை மனித வெடிகுண்டு என்று மிரட்டிய பெண்!! தன்னைத் தானே வெடிக்க செய்ய போவதாக மிரட்டல்!!! Read More »

துப்பாக்கி சூடு நடத்திய 86 வயது முதியவர்!!தபால் அலுவலகத்தில் தஞ்சம்!! சிலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய முதியவர்……

அக்டோபர் 31ஆம் தேதி அன்று ஜப்பானின் சைட்டாமாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 80 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர் ஒருவரும், நோயாளி ஒருவரும் காயம் அடைந்தனர். அதன் பிறகு அவர் வாராபியில் உள்ள தபால் நிலையத்திற்குள் சென்று அங்குள்ள சிலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பிறகு ஒருவர் விடுவிக்கப்பட்டார். காவல்துறையினர் கட்டிடத்துக்குள் நுழைந்து அந்த நபரை கைது செய்து, …

துப்பாக்கி சூடு நடத்திய 86 வயது முதியவர்!!தபால் அலுவலகத்தில் தஞ்சம்!! சிலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய முதியவர்…… Read More »

என்னது!! இந்த நாட்டுக்கு விசா இல்லாம போகலாமா!!!!

வரும் டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியா மற்றும் தைவான் நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டுக்கு வருகை புரியலாம். இந்த இருநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கான விசாவை தள்ளுபடி செய்ய போவதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் 30 நாட்களுக்குள் விசா இல்லாமல் அங்கு நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சீன சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழையலாம் என்றும், …

என்னது!! இந்த நாட்டுக்கு விசா இல்லாம போகலாமா!!!! Read More »

காவல்துறை அதிகாரிகளை கத்தியால் தாக்கிய 70 வயது நபர்!! ஏன் இந்த தாக்குதல்?

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இரண்டு காவல்துறை அதிகாரிகளை கத்தியால் குத்திய குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனை நகர காவல்துறை கூறியது. இச்சம்பவம் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு வெளியே நடந்ததுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்…….

அக்டோபர் 30ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 500க்கு 346 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. நகரின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 ஐத் தாண்டியுள்ளது. இது கடுமையான காற்று மாசுபாட்டை குறிக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காற்றின் தரக் குறியீடு 60 க்கு மேல் இருந்தால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுவதாக தெரிவித்தது. 20 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான …

உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்……. Read More »

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து……40 க்கும் மேற்பட்டோர் பலி…..

அக்டோபர் 28ஆம் தேதி அன்று கசகஸ்தானில் உள்ள Arcelor Mittal நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 சுரங்க தொழிலாளிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவரை காணவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் ஞாயிற்றுகிழமை அன்று துக்கம் தினமாக அனுசரிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் சுரங்கத்திற்குள் 252 பேர் இருந்ததாக நிறுவனம் கூறியது. இந்த தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் …

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து……40 க்கும் மேற்பட்டோர் பலி….. Read More »

கோர விபத்தை சந்தித்து சில மாதங்களிலே மற்றுமொரு பதைபதைக்கும் சம்பவம்…..

அக்டோபர் 29ஆம் தேதி அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த விசாகப்பட்டினம்-பாலசா விரைவு ரயில், அதன் மீது மோதியதில் நின்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது என்று ரயில்வே அதிகாரி கூறினார். இந்த விபத்து குறித்து அறிந்த ஆந்திர …

கோர விபத்தை சந்தித்து சில மாதங்களிலே மற்றுமொரு பதைபதைக்கும் சம்பவம்….. Read More »