உலக செய்திகள்

நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானம்!! ஏன்?

பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானம் டிசம்பர் 25ஆம் தேதி அன்று 276 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டது. அந்த விமானம் டிசம்பர் 26 ஆம் தேதியன்று காலை இந்தியா வந்தடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 21ஆம் தேதி அன்று துபாயிலிருந்து 303 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம், பிரான்ஸின் Vatry விமான நிலையத்தில் தொழில்நுட்ப காரணத்திற்காக தரையிறங்கியது. அந்த விமானத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் இரண்டு சந்தேக நபர்களை …

நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானம்!! ஏன்? Read More »

TEP, TWP Pass க்கு விண்ணப்பிப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள்!!

TEP, TWP பாஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை அதிகமானோர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். S-Pass இல் ஆட்களை எடுப்பதற்கு சற்று சிரமமாக இருந்த நிலையில் TEP, TWP பாஸ்களில் ஆட்களை எடுத்தனர்.ஏனென்றால்,இந்த பாஸ்களுக்கு எளிதாக Approval கிடைத்துவிடும். ஆனால், இந்த பாஸ்களுக்கான அனுமதி காலஅவகாசம் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே. இந்த பாஸ்கள் மூலம் சிங்கப்பூர் போவதற்கு விண்ணப்பிப்பவர்களில் ஒரு சிலருக்கு போலியான அல்லது தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்து வேலை வாங்கி கொடுத்துள்ளனர். அதனால் மீண்டும் …

TEP, TWP Pass க்கு விண்ணப்பிப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள்!! Read More »

தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரி!!

வியட்நாமில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 59 வயதான Nguyen Thanh Binh என்பவரை டிசம்பர் 25ஆம் தேதி அன்று காவல்துறை கைது செய்தனர். அவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மீகாங் டெல்டாவில் உள்ள An Giang மாகாணத்தில் மக்கள் குழுவின் தலைவராக பதவி வகித்து வருகிறார். அவர் பணத்திற்காக, Trung Hau 68 நிறுவனம் அதிக அளவில் மணலை சுரண்டுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நிறுவனம் உரிமம் …

தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரி!! Read More »

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் மேலும் இருவரை காணவில்லை!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரமான நிலையில் இன்னும் இரண்டு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 781 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர்கள் கூறினர். இந்த நிலநடுக்கத்தில் 200,000க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.மேலும் 15,000 வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.சுமார் 1,45,000 மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று …

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் மேலும் இருவரை காணவில்லை!! Read More »

நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தட்டி செல்லுமா ஜப்பான்?!

ஜப்பான் நாடு நிலவுக்கு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தது. செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து SLIM லேண்டரை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக நேற்று(டிசம்பர் 25) நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளதாக விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமை வந்து சேரும். அடுத்த மாதம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் …

நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தட்டி செல்லுமா ஜப்பான்?! Read More »

கொட்டி தீர்த்த மழை!! மலேசியாவின் கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிப்பு!!

மலேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடுமையான கனமழை காரணமாக 3 ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள Golok ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைவிட 8 மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர் மழையால் மாராங் மற்றும் டுங்குன் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!! தன்னை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்ற நபர்!!

பாம்பு கடித்து இறந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் இங்கு ஒருவர் அந்த பாம்பையே கடித்து கொன்றுள்ளார். அனைவரையும் வியக்க வைக்கும் இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. 48 வயதுடைய Boljulio Aleria என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 3 மீட்டர் நீளமுல்ல மலைப்பாம்பு குறுக்கே வந்துள்ளதாகவும், அவரை தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த மலைப்பாம்பு அவரின் இடுப்பைச் சுற்றி இறுகத் தொடங்கியது. உயிருக்கு பயந்த அவர் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றி கொள்ள நினைத்தார். …

அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!! தன்னை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்ற நபர்!! Read More »

மோசமான வானிலை காரணமாக கிறிஸ்துமஸ் மரம் விழுந்ததில் பெண் பலி!!

டிசம்பர் 21ஆம் தேதியன்று வீசிய கடும் புயல் காரணமாக பெல்ஜியம் கிறிஸ்துமஸ் சந்தையில் 20 மீட்டர் உயரம் உள்ள கிறிஸ்துமஸ் மரம் விழுந்தது. இதில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மரம் சரியாக வைக்கப்பட்டிருந்ததா என்பதை உறுதி செய்யவும், வானிலை தாக்கம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கம் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!!

பெருவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 7 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெருவின் லா ரின்கோனாடாவில் டிசம்பர் 21 ஆம் தேதி அன்று நடந்தது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் சுரங்கத்தில் கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்ற விபத்துகள் அங்கு அடிக்கடி ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இருவருக்கு நேர்ந்த விபரீதம்!!

டிசம்பர் 22-ஆம் தேதி ( நேற்று) ஜொகூரில் உள்ள தஞ்சோங் குப்பாங்கின் டோல் கேட்டில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மலேசியா காவல்துறை தெரிவித்தது. லாரியுடன் மோதியதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு வேலை பார்ப்பதற்காக இருவரும் வந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தால் அவர்கள் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி …

சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இருவருக்கு நேர்ந்த விபரீதம்!! Read More »