உலக செய்திகள்

மூடுபனியால் கவிழ்ந்த லாரி!! காயமடைந்தவர்களுக்கு உதவாமல் கோழிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் டிசம்பர் 27ஆம் தேதி அன்று ஆக்ரா-டெல்லி நெடுஞ்சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, விபத்துக்குள்ளான லாரியிலிருந்து கோழிகளை திருடுவதற்கு மக்கள் விரைந்தனர். கோழிகள் திருடப்படுவதை லாரி ஓட்டுனரால் தடுக்க முடியவில்லை.அதனால் அவருக்கு ₹2,50,000 இழப்பு …

மூடுபனியால் கவிழ்ந்த லாரி!! காயமடைந்தவர்களுக்கு உதவாமல் கோழிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள்!! Read More »

பயணிகளின் உயிர்களை ஊசலாடவிட்ட விமானிகள்?

ரஷ்யாவில் டிசம்பர் 28ஆம் தேதி அன்று பயணிகள் விமானம் ஒன்று தவறுதலாக உறைந்த ஆற்றில் தரையிறங்கியது. 30 பயணிகளை ஏற்றிச் சென்ற போலார் ஏர்லைன்ஸின் Antonov-24 விமானம் Zyryanka விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு வெளியே உள்ள கோலிமா ஆற்றில் பாதுகாப்பாக தரையிறங்கியது. முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க காரணம் விமானிகள் என்று தெரியவந்துள்ளது.அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெரிட் புயலின் தாக்கம்:நிலவி வரும் மோசமான வானிலை!!மூன்று பேர் பலி!!

வடக்கு இங்கிலாந்தில் கெரிட் புயல் காரணமாக கனமழை மற்றும் கடுமையான பனி பெய்து வருகிறது.அங்கு நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக கார் ஒன்று Esk ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் டிசம்பர் 28ஆம் தேதி அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவுடன் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் கார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. காருக்குள் இருந்த மூவரும் இறந்துவிட்டனர் என்று …

கெரிட் புயலின் தாக்கம்:நிலவி வரும் மோசமான வானிலை!!மூன்று பேர் பலி!! Read More »

சுறா தாக்கியதில் சிறுவன் மரணம்!!

தெற்கு ஆஸ்திரேலியாவில் Adelaide-ஐ சேர்ந்த 15 வயது சிறுவன் சுறா தாக்கி உயிரிழந்தான்.இச்சம்பவம் டிசம்பர் 28ஆம் தேதி அன்று Yorke தீபகற்பகத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான Ethel கடற்கரைக்கு அருகில் நடந்தது. சிறுவன் அங்கு சர்ஃபிங் செய்வதற்காக வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.சுறா தாக்கிய போது சிறுவன் கடற்கரையில் இருந்து 30 மீட்டர் முதல் 40 மீட்டர் தொலைவில் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை மீட்பதற்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சிறுவனின் உடல் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டதாக காவல் …

சுறா தாக்கியதில் சிறுவன் மரணம்!! Read More »

நிக்கல் உருக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலி!! தொழிலாளர்கள் போராட்டம்!!

டிசம்பர் 27ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள நிக்கல் உருக்கும் ஆலையின் வளாகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 23ஆம் தேதி அன்று அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களில் 8 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். …

நிக்கல் உருக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலி!! தொழிலாளர்கள் போராட்டம்!! Read More »

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்கு தாய்லாந்து!!

தெற்கு தாய்லாந்தில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.டிசம்பர் 22ஆம் தேதியன்று தொடங்கிய வெள்ளம் தாய்லாந்தின் பல பகுதிகளில் உள்ள சுமார் 70,000க்கும் அதிகமான வீடுகளை சேதப்படுத்தியது. இந்த வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் அப்பகுதிகளில் வெள்ள நீர் ஓரளவு வடிந்ததை அடுத்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். வெள்ளம் காரணமாக சில நாட்கள் நிறுத்தப்பட்ட …

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்கு தாய்லாந்து!! Read More »

கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் காலமானார்!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று(டிசம்பர் 28) சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்படவே வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். …

கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் காலமானார்!! Read More »

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண், இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பித்த அதிசயம்!!

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.இச்சம்பவம் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் கணவர் உட்பட, நான்கு பேரும் பீகாரின் பாகல்பூர் நகரில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் ரயிலில் ஏறிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏராளமான பயணிகள் ரயிலில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக அந்த மூவரும் தண்டவாளத்தில் விழுந்தனர்.விரைவு ரயில் நகர்ந்து சென்றபோது அந்த பெண் தனது பிள்ளைகளை …

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண், இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பித்த அதிசயம்!! Read More »

நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! பலி எண்ணிக்கை உயர்வு!!

இந்தோனேசியாவில் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் டஜன் கணக்கான தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தன்றே தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தீ விபத்துக்கான காரணம் …

நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

புரட்டிப்போட்ட புயலுக்குபின் வெளுத்து வாங்கிய கனமழை!! 9 பேர் பலி!!

டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது.இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 86,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். புயல் காரணமாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.பலத்த காற்று வீசியதில் வீட்டின் கூரைகள் பறந்து சென்றன மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்து கிடந்தன. மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் …

புரட்டிப்போட்ட புயலுக்குபின் வெளுத்து வாங்கிய கனமழை!! 9 பேர் பலி!! Read More »