சிங்கப்பூரின் செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது!
வரும் 22-ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்புக்காகவும், பேரிடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-55 என்று ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் முதல் ஏவுத்தளத்தில் இருந்து சிங்கப்பூர் செயற்கைக்கோள் ஏவப்படும். …