அனைத்து செய்திகள்

Singapore Job News Online

கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு ஒளிந்து கொண்ட சிறுவன்!சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் மீட்பு!

பங்களாதேஷின் சிட்டாகோங்கில் Fahim எனும் சிறுவன் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ஒளிவதற்காக கப்பல் கொள்கலனுக்குள் சென்றுள்ளான். அப்போது அவனுக்கு உடல் அசதியாக இருந்துள்ளது. அதனால் அப்படியே தூங்கிவிட்டான். இந்த சம்பவம் ஜனவரி 11-ஆம் தேதி நடந்தது. கப்பல் கொள்கலனுக்குள் தூங்கிய சிறுவன் ஆறு நாட்களுக்கு பிறகு, சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் வேறொரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டான். அதாவது,கடந்த 17-ஆம் தேதி ஒரு வாரம் கழித்து மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் …

கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு ஒளிந்து கொண்ட சிறுவன்!சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் மீட்பு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர் மதுபான கூடங்களுக்கு உணவகங்களுக்கு புதிய விதிமுறை!

சிங்கப்பூரில் புதிய விதிமுறை அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் செயல்படும் மதுபானக்கூடங்களில், உணவகங்களில் ஆகியவற்ற இடங்களில் மதுபானம் விற்க, அருந்துவதற்கு அனுமதிக்கப்படும் நேரங்களைக் குறிக்கும் அறிவிப்புகள் வைக்கப்பட வேண்டும். இந்த புதிய விதிமுறை மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இவ்வாறு காவல்துறை தெரிவித்தது. காவல்துறையும்,உள்துறை அமைச்சகமும் மதுபான விற்பனைத் தொடர்பான விதிமுறைகளை மறு ஆய்வு செய்து இருக்கிறது. மதுபான விற்பனை உரிமம் பெற்ற இடங்களின் விதிமுறைகளை மறு ஆய்வு செய்தது. மதுபானம் விற்க உரிமம் பெற்ற …

சிங்கப்பூர் மதுபான கூடங்களுக்கு உணவகங்களுக்கு புதிய விதிமுறை! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை! ஜெருசலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம்!

கிழக்கு ஜெருசலத்தில் யூத ஆலயத்துக்கு அருகே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. அதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமுற்றனர். இச்சம்பவத்தைக் குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் இந்த தாக்குதலை சிங்கப்பூர் கடுமையாக கண்டிக்கிறது என்றும், இது அருவருக்கத்தக்க தாக்குதல் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலை 21 வயதுடைய பாலஸ்தீனத் துப்பாக்கிக்காரர் நடத்தியதாக இஸ்ரேலிய காவல்துறை கூறியது. தாக்குதல் நடத்தியவர் தனித்து செயல்பட்டதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல், …

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை! ஜெருசலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூருக்கு மலேசியப் பிரதமர் வருகை!

சிங்கப்பூருக்கு இன்று மலேசிய பிரதமர் வருகை புரிகிறார். இது அவர் முதல் அதிகாரத்துவ வருகை. மலேசியா பிரதமராக பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு முதல்முறையாக வருகை புரிகிறார். இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நீண்ட கால உறவை புலப்படுத்தும் வகையில் இவருடைய வருகை அமைவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கூறியது. மலேசிய பிரதமர் அன்வாருக்கு சிங்கப்பூர் பிரதமர் அதிகாரத்துவ மதிய விருந்தளிப்பார். மலேசியா பிரதமர் அன்வாருக்கு இன்று இஸ்தானாவில் சடங்குப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படும்.அதன்பின் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபைச் …

சிங்கப்பூருக்கு மலேசியப் பிரதமர் வருகை! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கருக்குழாய் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு!

சிங்கப்பூரில் கருக்குழாய் வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும். இந்த வகையான புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டாய் நிலையாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாண்டு சரிவுக்குப் பிறகு நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். வழக்கமான மருத்துவ பரிசோதனை மூலம் இதன் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த புற்றுநோய்க்கு பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். பெண்களிடம் மட்டுமே இந்த வகையான புற்றுநோய் காணப்படும். இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் 200 …

சிங்கப்பூரில் கருக்குழாய் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு! Read More »

Tamil Sports News Online

NRI டெக் ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கடியான சூழல்!

அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கமாக அங்கு செயல்படும் நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்கள் முதலிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப் பட போவதாக அறிவித்தது. இதனால் டெக் ஊழியர்களுக்கும் மோசமான காலகட்டமாக அமைந்துள்ளது.இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பணி புரியும் டெக் ஊழியர்கள் மோசமான சூழ்நிலையை எதிர் கொண்டு வருகின்றனர்.ஒரு பக்கம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பணி நீக்கம், மறுபுறம் வேறு வேலையில் சேர முடியாமலும் புதிய வேலைவாய்ப்புகள் …

NRI டெக் ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கடியான சூழல்! Read More »

Latest Sports News Online

இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!

இந்தியாவில் நோய் பரவல் காலத்தின் போது பல பேரால் Work From Home என்ற வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் வேலை இணையம் மூலம் தேடப்பட்டது. இதனை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறைக்கு மோசடி கும்பல் குறித்த புகார்கள் வந்துள்ளது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரிக்க தொடங்கியது. வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டும் என்று தேடுபவர்களுக்கு தொடர்புக் கொண்டு இந்தியா தலைநகரமான புது டெல்லியில் …

இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மூத்தோர் செவிலியர் இல்லத்தில் புதிய நடவடிக்கைகள்!

சிங்கப்பூரில் NTUC Health தாதிமை இல்ல நிர்வாக அமைப்பு கூடுதல் பராமரிப்பு தெரிவுகள் வழங்குகிறது. தாதிமை இல்லத்தில் இனி மூத்தோர் குறுகிய காலத்திற்கு தங்கிக் கொள்ளலாம். NTUC Health அமைப்பின் புதிய செவிலியர்கள் இல்லம் jurong spring இல் அமைந்துள்ளது. அங்கு 240 குடியிருப்பாளர்கள் முழு நேரமாக வசிக்கின்றனர். புதிய இல்லத்தில் பிடித்த பாடல்கள் பாடுவது முதல் இன்னும் பல நடவடிக்கைகள் உள்ளது. மூத்தோர் செவிலியர் இல்லங்கள் முக்கியப் பங்கு வகுக்கிறது என்று சுகாதார அமைச்சர் கூறினார். …

சிங்கப்பூரில் மூத்தோர் செவிலியர் இல்லத்தில் புதிய நடவடிக்கைகள்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தையைக் கண்காணிக்கிறது!

சென்ற ஆண்டு சொத்து சந்தையின் சூட்டைத் தணிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் சொத்து விலை மிதமாக இருந்தது. இதனை நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்ட போதிலும், சொத்து சந்தை ஏற்ற இறக்கமாக இருப்பதையும் அவர் கூறினார். சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதேபோல் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் வீடு இருப்பதையும் உறுதி செய்வதற்காக சொத்துச் சந்தை கண்காணிக்கப்படுகிறதாக துணைப் பிரதமர் Heng Swee keat கூறினார். சொத்துப் பரிவர்த்தனையும் குறைந்து உள்ளதாக தெரிவித்தார். …

சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தையைக் கண்காணிக்கிறது! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கிருமித் தொற்று பரவல் குறைவு!

சிங்கப்பூரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார். இன்னும் பெரிய அளவில் இயல்புநிலை திரும்புவதை எதிர்பார்க்கலாம். தற்போது சீன புத்தாண்டு விடுமுறை முடிந்துள்ளது. விடுமுறைக்குப் பிறகு கிருமிப்பரவல் நிலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று கூடலுக்கான வரம்பும் அடங்கும். விடுமுறை காலத்திற்கு பிறகு நோய் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.ஆனால், முக கவசம் அணிந்து கொள்ள …

சிங்கப்பூரில் கிருமித் தொற்று பரவல் குறைவு! Read More »