சிங்கப்பூர் சில்லறை விற்பனை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் ஏழரை விழுக்காடு உயர்வு!
சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் சில்லறை விற்பனை உயர்ந்திருக்கிறது. இதை முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்ததில் ஏழரை விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகமாக விற்பனையான பொருட்கள் மதுபானம், கைப்பை,காலணி முதலியவை ஆகும். ஆனால் கார்,பெட்ரோல் விற்பனைக் குறைந்துள்ளது. உணவுத்துறையின் வளர்ச்சியும் 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.