உலக செய்திகள்

போதைப்பொருட்களை கடத்துவதற்காகவே தங்களுக்கென நிறுவனத்தை உருவாக்கிய கடத்தல் கும்பல்!!

தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு கடத்தி வரப்பட்ட 7.5 டன் எடை கொண்ட போதைப்பொருளை ஸ்பெயின் துறைமுகத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.டன் கணக்கில் போதைப் பொருட்கள் சிக்கி உள்ளது. இந்த போதைப் பொருட்கள் உறைந்த டியூனா மீன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஸ்பெயின் நாட்டின் மற்றுமொரு துறைமுகத்தில் கப்பல் கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 டன் எடை கொண்ட போதைப்பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தல்காரர்கள் …

போதைப்பொருட்களை கடத்துவதற்காகவே தங்களுக்கென நிறுவனத்தை உருவாக்கிய கடத்தல் கும்பல்!! Read More »

இரண்டு பேரை கத்தியால் குத்த முயன்ற நபர்!! காவல்துறையிடம் சிக்கி கொள்வதை தவிர்க்க ஜன்னலிருந்து குதித்து மரணம்!!

பிரேசிலின் சால்வடார் நகரில் தனது காதலியையும், டாக்ஸி டிரைவரையும் கத்தியால் குத்த முயன்றதாக 30 வயதுடைய அமெரிக்க குடிமகனான Zachary Modi Mikaya மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர்கள் கூறினர். போலி ஆவணங்களை வைத்து ஹோட்டலில் தங்கி இருந்ததால் அவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் சிரமப்பட்டனர். மேலும் அவர் …

இரண்டு பேரை கத்தியால் குத்த முயன்ற நபர்!! காவல்துறையிடம் சிக்கி கொள்வதை தவிர்க்க ஜன்னலிருந்து குதித்து மரணம்!! Read More »

வேலையிடத்தில் விபத்து!! ஐந்து பேர் மரணம்!!

டிசம்பர் 11ஆம் தேதி அன்று ஸ்வீடனில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் ஐந்து பேரும் லிஃப்ட்டுக்குள் இருந்ததாகவும், லிஃப்ட் சரிந்து கீழே விழுந்ததில் அவர்கள் பலத்த காயங்களுடன் இறந்ததாகவும் அவர்கள் கூறினர். விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதனால் அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா??

தெற்கு பிரேசிலில் கிட்டத்தட்ட 1000 நீர் நாய்கள் மற்றும் கடல் சிங்கங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளை இந்த பாதிப்பிலிருந்து தடுக்க இறந்த உயிரினங்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த வைரஸ் கடல் பாலூட்டிகளின் நரம்பு மண்டலத்தை தாக்குவதால், அவற்றின் வலி கொடுமையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸ் …

மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா?? Read More »

கிழக்கு காங்கோவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை!!

கிழக்கு காங்கோவின் புகாவுவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.மேலும் இப்பகுதி, மோசமான கட்டமைப்பு மற்றும் வறுமை காரணமாக தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறினர்.

துப்பாக்கி சூடு சம்பவம்!! இரண்டு பேர் மரணம்!!

டிசம்பர் 11ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் சியோன் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். நகரின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய பெண் மற்றும் 41 வயதுடைய ஆண் கொல்லப்பட்டனர். மேலும் 49 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

டென்னசியை புரட்டி போட்ட சூறாவளி!!

டிசம்பர் 9ஆம் தேதி அன்று அமெரிக்க மாநிலமான டென்னசியில் கடுமையான புயல் மற்றும் சூறாவளி தாக்கியது. இதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் கூறினர். இந்த சூறாவளி ஏற்பட்டதன் விளைவாக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இந்த சூறாவளியால் பல வீடுகள், மரங்கள் மற்றும் மின்கம்பிகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்கள் சாலைகளில் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

பெருவை ஒரே நாளில் தாக்கிய நிலநடுக்கங்கள்!!

டிசம்பர் 10ஆம் தேதி அன்று மத்திய பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதே பகுதியில் அதே நாளில் ஏற்பட்ட 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பசிபிக் நெருப்பு வளையத்தில் பெரு …

பெருவை ஒரே நாளில் தாக்கிய நிலநடுக்கங்கள்!! Read More »

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!!12 பேர் பலி? காரணம் என்ன?

தென்கிழக்கு வெனிசுலாவில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பிரேசிலின் எல்லையில் உள்ள பொலிவர் மாநிலத்தில் டிசம்பர் 6ஆம் தேதி அன்று நிகழ்ந்தது. நவம்பர் மாதத்தில் இதே போன்ற விபத்து ஒன்று அந்த சுரங்கத்தில் ஏற்பட்டதாக அரசு சாரா நிறுவனமான SOS Orinoco தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகளை அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்துக்குள்ளாகும் சுரங்கங்கள் அதிகாரிகளின் …

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!!12 பேர் பலி? காரணம் என்ன? Read More »

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!!

டிசம்பர் 9ஆம் தேதி அன்று பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் MST-க்கு சொந்தமான முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இணையதள சேவைக்கான கம்பிகளை நிறுவும் பொழுது மின்சார கம்பிகளில் short circuit ஏற்பட்டது. அதுவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் இறந்தவர்களில் ஆறு பேர் முகாமில் வசிப்பவர்கள். …

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!! Read More »