உலக செய்திகள்

முன்னாள் காதலியை கொலை செய்த காதலன்!!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 21 வயதான Narumi Kurosaki என்ற பெண்ணை, சிலி நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய நிக்கோலஸ் செபெடா என்ற நபர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் நிக்கோலசின் முன்னாள் காதலி என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்ததாக தகவல் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிக்கோலசுக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நிக்கோலசின் வழக்கறிஞர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்தார்.மேல்முறையீட்டு விசாரணையில் …

முன்னாள் காதலியை கொலை செய்த காதலன்!! Read More »

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!!

டிசம்பர் 20ஆம் தேதி அன்று வடகிழக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மை ஆண்டுகளில் சீனாவின் சுரங்கத் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு சுரங்கங்களில் இந்த …

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!! Read More »

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்வு!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சீனாவை உலுக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.சுமார் 982 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் டஜன் கணக்கானோரரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் 145,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸாக இருப்பதால் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் உறைபனியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு …

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

தனது பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பிறகு நிரபராதி என்று தீர்ப்பு!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் 71 வயது முதியவரான திரு. க்ளின் சிம்மன்ஸ், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்நாளை கழித்த பிறகு நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார். செய்யாத குற்றத்திற்காக அவர் 48 ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் சிறையில் கழித்துள்ளார். கறுப்பினத்தவரான அவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு திரு. க்ளின் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவரும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு …

தனது பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பிறகு நிரபராதி என்று தீர்ப்பு!! Read More »

பிரபல தொழில் அதிபர் கடத்தல்!! மீட்கப்பட்டாரா?கடத்தலுக்கான பின்னணி என்ன??

டிசம்பர் 16ஆம் தேதி Ecuador இல் கடத்தப்பட்ட கொலின் ஆம்ஸ்ட்ராங் என்ற நபர் டிசம்பர் 20ஆம் தேதி அன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் ஒரு பிரபல பிரிட்டிஷ் தொழிலதிபர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் இவர் பிரிட்டனின் முன்னாள் கவுரவ தூதராகவும் பணி புரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலினை பணத்திற்காக கடத்தியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தல் தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் …

பிரபல தொழில் அதிபர் கடத்தல்!! மீட்கப்பட்டாரா?கடத்தலுக்கான பின்னணி என்ன?? Read More »

KING ARUN க்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நாளா வீடியோ போடல??

KING ARUN அவர்களை நம்மில் பலருக்கு தெரியும்.KING ARUN YouTube,Telegram, Facebook Channel வாயிலாக சிங்கப்பூர் பற்றிய தகவல்கள், வேலை வாய்ப்புகள் குறித்து பகிர்ந்து வந்தார். அதோடு பலருக்கு இலவச வேலை வாய்ப்புகள், குறைந்த செலவில் முன்பணம் பெறாமல் வேலை வாய்ப்புகளை வாங்கி தந்துள்ளார். நமது SG TAMILAN இணைய பக்கத்திற்கும் பல தகவல்களை அளித்து வந்தார். அவரின் YouTube சேனலில் கிட்டத்தட்ட 70,000 பாலோவர்ஸ்கள் இருக்கின்றனர்.அவரது சேனலில் சிங்கப்பூரில் அவ்வப்போது மாறுகின்ற மாற்றங்கள், புதிய கட்டுப்பாடுகள், …

KING ARUN க்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நாளா வீடியோ போடல?? Read More »

பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் நபர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!!

மலேசியாவின் பெனாங் மாநிலத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அவர் பெனாங்கில் உள்ள பட்டர்வர்த் நகரில் 42 வயதான பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிறகு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் டிசம்பர் 19ஆம் தேதியன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பாலத்தில் இருந்து குதித்த அந்த நபரை மீனவர்கள் காப்பாற்றினர். பிறகு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலை சம்பவம் …

பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் நபர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!! Read More »

சீனாவில் நிலநடுக்கம்!! இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றும் மீட்பு பணியாளர்கள்!!

சீனாவின் வட மேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 155,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2500 கூடாரங்கள், 5000 …

சீனாவில் நிலநடுக்கம்!! இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றும் மீட்பு பணியாளர்கள்!! Read More »

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், அவர்களுக்கு …

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!! Read More »

சூறாவளி தாக்கத்தின் எதிரொலி!! நகரம் முழுவதையும் சூழ்ந்த வெள்ளம்!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஜாஸ்பர் சூறாவளியால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் 85 வயது முதியவர் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அவரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகரம் முழுவதும் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அபாய நிலையை எட்டியது. இதனால் தொலைதூரப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்ற மக்களை மீட்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த …

சூறாவளி தாக்கத்தின் எதிரொலி!! நகரம் முழுவதையும் சூழ்ந்த வெள்ளம்!! Read More »