உலக செய்திகள்

சுரங்கப்பாதை ரயில்கள் மோதி கொண்டு விபத்து!!

நியூயார்க் மாநகரங்களில் ஒன்றான மன்ஹாட்டனில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதி தடம் புரண்டன.இந்த விபத்தில் 24 பேர் காயமடைந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இச்சம்பவம் ஜனவரி 4ஆம் தேதி அன்று மதியம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில், வேலை ரயில் உடன் மோதியது. வேலை ரயிலில் நான்கு போக்குவரத்து …

சுரங்கப்பாதை ரயில்கள் மோதி கொண்டு விபத்து!! Read More »

தாய்லாந்து கடலில் காணப்பட்ட முதல் வெள்ளை திமிங்கலம்!!

தெற்கு தாய்லாந்தின் கிராபி மாகாணத்தில் உள்ள Phi Phi தீவுகளுக்கு அருகில் அந்தமான் கடலில் வெள்ளை திமிங்கலம் நீந்திக் கொண்டிருந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் வெள்ளை திமிங்கலத்தை வீடியோ எடுத்துள்ளார். இதை தாய்லாந்து பூங்கா அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தாய்லாந்து கடலில் காணப்பட்ட முதல் திமிங்கலம் இதுவாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.இந்த வெள்ளைத் திமிங்கலம் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் திமிங்கலம் காணப்பட்ட …

தாய்லாந்து கடலில் காணப்பட்ட முதல் வெள்ளை திமிங்கலம்!! Read More »

தீயால் முழுவதுமாக எரிந்து நாசமான விமானம்!! எப்படி நடந்தது?

ஜனவரி 2ஆம் தேதி அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனிடா விமான நிலையத்தில் ஒரு விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஜப்பானிய கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்த விபத்தில் சுமார் 15 பில்லியன் யென் இழப்பு ஏற்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. இந்த இழப்பு, காப்பீடு மூலம் ஈடுசெய்யப்படும் என்று நிறுவனம் கூறியது. இந்த விபத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் …

தீயால் முழுவதுமாக எரிந்து நாசமான விமானம்!! எப்படி நடந்தது? Read More »

ரயில் ஸ்டேஷனில் மூன்று பேரை கத்தியால் குத்திய பெண்!! பின்னணி என்ன?

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ரயிலில் நடந்த கத்திகுத்து சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணை காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்த தாக்குதலில் மூன்று ஆண்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த தாக்குதல் குறித்து இரவு 11 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் கூறினர். இச்சம்பவம் ஜனவரி 3ஆம் தேதி அன்று டோக்கியோவில் உள்ள அகிஹபாரா ரயில் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக கிழக்கு ஜப்பான் ரயில்வே …

ரயில் ஸ்டேஷனில் மூன்று பேரை கத்தியால் குத்திய பெண்!! பின்னணி என்ன? Read More »

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா?

ஜனவரி 1ஆம் தேதி அன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 31,800 க்கும் அதிகமான மக்கள் தற்காலிக மையங்களில் தங்கி இருப்பதாக அவர்கள் கூறினர்.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கட்டிடங்கள் நாசம் அடைந்தன.இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலைகள் …

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

அண்மை நாட்களில் பலமுறை வெடித்த எரிமலை!! முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றம்!!

கிழக்கு இந்தோனேஷியாவில் உள்ள Mount Lewotobi Laki-Laki என்ற எரிமலை அண்மை வாரங்களாக பலமுறை வெடித்து சாம்பல் புகையை வெளியேற்றுகிறது. இதனைத் தொடர்ந்து அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புத்தாண்டு தினத்தன்று, எரிமலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் உயரத்தில் சாம்பல் வெளியேறியதாகவும் அவர்கள் கூறினர். வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்ததை தொடர்ந்து Frans Seda விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குமுன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களின் உடல்கள் மீட்பு!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று சீனாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் 149 பேர் உயிரிழந்தனர் என்றும், இரண்டு பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது, காணாமல் போன அந்த இருவரின் உடல்கள் கிங்காயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது என்று அவர்கள் கூறினர். சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.இந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 200,000 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் …

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குமுன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களின் உடல்கள் மீட்பு!! Read More »

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!!

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல சேதமடைந்தன.மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் சேவைகள் …

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!! Read More »

வருடம் தொடங்கிய முதல் நாளில் நடந்த கலவரம்!!

நெதர்லாந்தில் புத்தாண்டு தினத்தன்று நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். டஜன் கணக்கான காவல்துறையினர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று பட்டாசு வெடித்ததில் 19 வயது இளைஞன் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர். இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படையினர் களுக்கும் காயங்கள் ஏற்பட்டன.எனவே தீயணைப்புப் படைகளுக்கு உதவ கலகப் படைகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டன.

விமான விபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 72 பேர் உயிரிழந்த விவகாரம்!! மனித தவறால் ஏற்பட்டதா?

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நேபாளத்தின் பொக்காரா நகரத்தில் Yeti ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரை இறங்குவதற்கு முன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 72 பேரும் உயிரிழந்தனர். நேபாளத்தில் 30 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். விமானிகள் தவறான லீவர்களை பயன்படுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தெரிவித்தது. மேலும் விமானிகளுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி இல்லை என்று …

விமான விபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 72 பேர் உயிரிழந்த விவகாரம்!! மனித தவறால் ஏற்பட்டதா? Read More »