உலக செய்திகள்

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!!

தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் Jeju Air விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி கோர விபத்து நேர்ந்துள்ளது.அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சுவரில் மோதியது. சிங்கப்பூர் நேரப்படி டிசம்பர் 29 (இன்று) காலை 8 மணியளவில் விபத்து நடந்தது.தாய்லாந்தில் இருந்து விமானம் 175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது. பலத்த வெடி சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். மேலும் அந்த விமானத்தில் தாய்லாந்து நாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களது குடும்பங்களுக்கு […]

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!! Read More »

வறுமையில் சிக்கி தவிக்கும் நைஜீரியா …!!! உணவுக்காக திண்டாடும் மக்கள்…!!

வறுமையில் சிக்கி தவிக்கும் நைஜீரியா …!!! உணவுக்காக திண்டாடும் மக்கள்…!! நைஜீரியாவில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு உணவுப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நைஜீரியாவில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே உலகில் அதிகமான மக்கள் பசியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்று. லாகோஸ் நகரில் வாழும் மக்கள் தற்போது உணவு வங்கிகளையே

வறுமையில் சிக்கி தவிக்கும் நைஜீரியா …!!! உணவுக்காக திண்டாடும் மக்கள்…!! Read More »

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி…!!!நாசாவின் பார்க்கர் விண்கலம் படைத்த சாதனை…!!!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி…!!!நாசாவின் பார்க்கர் விண்கலம் படைத்த சாதனை…!!! நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று சாதனை படைத்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.1 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்த பிறகு, பார்க்கர் விண்கலம் பாதுகாப்பாக இருப்பதாகவும் சாதாரணமாக இயங்குவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்தினம் விண்கலம் நட்சத்திரத்தின் வெளிப்புற வளிமண்டலத்தில் மூழ்கியது. இந்நிலையில் நாசா அதன் சிக்னலுக்காக காத்திருந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு அதற்கு சிக்னல் கிடைத்தது. நாசாவின் அறிவியல் துறைத்

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி…!!!நாசாவின் பார்க்கர் விண்கலம் படைத்த சாதனை…!!! Read More »

டிக் டாக் செயலி தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த டிரம்ப்…!!!

டிக் டாக் செயலி தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த டிரம்ப்…!!! அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.டோனல்ட் டிரம்ப் TikTok செயலியை தடை செய்யும் சட்டம் அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பதவியேற்ற பிறகு அரசியல் ரீதியாக தீர்வு காண கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளார். TikTok செயலியின் உரிமையாளரான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதிக்குள் அதை விற்க வேண்டும் இல்லையெனில்

டிக் டாக் செயலி தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த டிரம்ப்…!!! Read More »

அரசு முத்திரையை இழந்த கேட்பரி சாக்லெட் நிறுவனம்…!!!

அரசு முத்திரையை இழந்த கேட்பரி சாக்லெட் நிறுவனம்…!!! கேட்பரி சாக்லெட் நிறுவனம் தனது அரச முத்திரையை இழந்துள்ளது. 170 ஆண்டுகளில் கேட்டபரிக்கு இப்படி நடந்தது இதுவே முதல் முறையாகும். அரச முத்திரை கொண்ட நிறுவனங்கள் அரச குடும்பத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் அதிகாரம் கொண்டது. அந்த நிறுவனங்கள் அரசு முத்திரையை விளம்பரங்களில் பயன்படுத்தலாம். 1854 ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணி கேட்பரிக்கு அரச முத்திரையை வழங்கினார். ஆனால் சார்லஸ் மன்னரின் ஆட்சியில் கேட்பரி நிறுவனம் தனது

அரசு முத்திரையை இழந்த கேட்பரி சாக்லெட் நிறுவனம்…!!! Read More »

விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்?

விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்? அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தில் உள்ள காஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒருவர் உயிரிழந்து காணப்பட்டார். சிக்காகோ நகரின் ஓஹேர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 787-10 ரக விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போயிங் 787-10 விமானம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 9:31 மணிக்கு சிக்காகோவில் இருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:12 மணிக்கு மௌய் வந்தடைந்தது.

விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்? Read More »

காதலர் தினமாக மாறிய கிறிஸ்துமஸ்..!!!

காதலர் தினமாக மாறிய கிறிஸ்துமஸ்..!!! கிறிஸ்துமஸ் என்பது குடும்பத்துடன் அன்பையும் பரிசுகளையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஜப்பானில் கிறிஸ்துமஸ் தம்பதிகளுக்கு ஏற்ற நாளாக மாறியுள்ளது. காதலர் தினத்தைப் போன்று ஒரு காதல் கொண்டாட்டமாக உருவெடுத்துள்ளது. 124 மில்லியன் மக்கள் வாழும் ஜப்பானில், கிறிஸ்துமஸ் இரண்டாவது காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் அற்புதமான அலங்காரங்கள் மற்றும் வண்ண விளக்குகளுடன் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பல தம்பதிகள் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ஒரு சிறப்பு தேதியை அனுபவிக்கிறார்கள்.

காதலர் தினமாக மாறிய கிறிஸ்துமஸ்..!!! Read More »

தாய்லாந்தில் கோல்டன் டைகரைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்…!!!

தாய்லாந்தில் கோல்டன் டைகரைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்…!! தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் நைட் சஃபாரிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் அங்குள்ள தங்கப் புலிகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தங்க நிற புலிகளை காணும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. தங்க நிறத்தில் பூனைக்குட்டிகள் போல் காட்சியளிக்கும் அரிய வகைப் புலிகள் மக்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது. தங்கப் புலிக் குட்டிகளைக்

தாய்லாந்தில் கோல்டன் டைகரைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்…!!! Read More »

கடலுக்கடியில் முக்குளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா…!!

கடலுக்கடியில் முக்குளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா…!! கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்.. கொட்டும் பனியில் உலா வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் கடலுக்கு அடியில் வலம் வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்ததுண்டா..?? கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் உள்ள அக்வாரியம் மரைன் கடலடிக் காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவை காணலாம். சாண்டா கிளாஸ் கடலுக்கடியில் அவருக்கென உரிய பிரத்யேக ஆடையில் வலம் வருவார். பார்ப்பவரின் கண்களை கவரும்

கடலுக்கடியில் முக்குளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா…!! Read More »

வாணவேடிக்கை நின்றதும்.. பிஞ்சுக் குழந்தையின் மூச்சும் நின்றது…!!!

வாணவேடிக்கை நின்றதும்.. பிஞ்சுக் குழந்தையின் மூச்சும் நின்றது…!!! சீனாவில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பல இணையவாசிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் இறுதி தருணங்கள் அடங்கிய காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. குய்ஸோ பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களின் ஒன்றரை வயது குழந்தையின் இதயத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோர் குழந்தையை காப்பாற்ற போராடினர். இதனால் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தனர். ஆனால் அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் இதயத் துடிப்பு பாதியிலேயே

வாணவேடிக்கை நின்றதும்.. பிஞ்சுக் குழந்தையின் மூச்சும் நின்றது…!!! Read More »