உலக செய்திகள்

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்….. கடலில் எழுந்த சுனாமி அலைகள்….

பசிபிக் பெருங்கடலில் உள்ள Izu தீவுகளில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜப்பான் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எழுந்த சுனாமி அலைகளால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கையை நீக்கியதாக நிபுணர்கள் தெரிவித்தனர். Shimoda-வில் இருந்து 551 கிலோமீட்டர் தெற்கே 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. Hachijojima தீவை 60 சென்டிமீட்டர் அளவிலான சுனாமி அலைகள் தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் மேற்கு கொச்சி மற்றும் தெற்கு Miyazaki மாகாணங்களில் […]

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்….. கடலில் எழுந்த சுனாமி அலைகள்…. Read More »

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து……மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்…..

அக்டோபர் 6ஆம் தேதி அன்று (நேற்று) தெற்கு மெக்ஸிகோவில் இடம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். Oaxaca-வையும் அதன் அண்டை மாநிலமான Puebla-வையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இது போன்ற பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2014

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து……மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்….. Read More »

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்…… 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவு……

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்னஞ்சல் மூலமாக மணிலாவிலிருந்து பல சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமானங்கள் வெடித்துச் சிதறக் கூடும் என்று மிரட்டல் வந்தது.அது பெரும்பாலும் புரளியாகவே இருக்கக்கூடும் என்றும் விமான போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இருப்பினும் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான மணிலா மற்றும் அதன் 2 பெரிய

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்…… 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவு…… Read More »

இந்தியாவில் இமயமலை பனிப்பாறை ஏரி ஒன்று உடைப்பு…..100 பேர் காணவில்லை….

கனமழை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கத்தால் 18 பேர் உயிரிழந்ததாகவும், கிட்டத்தட்ட 100 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட மோசமான பேரழிவு இதுவே ஆகும். சிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரி உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இதனால் கிட்டத்தட்ட 22,000 பேரின் வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளப்பெருக்கில் 14 பாலங்கள்

இந்தியாவில் இமயமலை பனிப்பாறை ஏரி ஒன்று உடைப்பு…..100 பேர் காணவில்லை…. Read More »

மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்….. மாயமான 23 ராணுவ வீரர்களை தேடும் பணியில் சிக்கல்…..

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான Sikkim-ல் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கத்தை அடுத்து 23 ராணுவ வீரர்களை காணவில்லை என்றும், தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிம் தலைநகர் Gangtok-ல் உள்ள சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையும் இந்த வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது. Gangtok-ல் இருந்து 150 கிலோமீட்டர் வடக்கே சீனாவின் எல்லைக்கு

மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்….. மாயமான 23 ராணுவ வீரர்களை தேடும் பணியில் சிக்கல்….. Read More »

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய பேருந்து……உடல்களை மீட்க சிரமம்பட்ட தீயணைப்பு வீரர்கள்…..

அக்டோபர் 3 ஆம் தேதி (நேற்று) இரவு, வடக்கு இத்தாலியில் வெனிஸ் நகருக்கு அருகே, 40 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த பேருந்து மின்சார கம்பிகளில் மோதி தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால்,

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய பேருந்து……உடல்களை மீட்க சிரமம்பட்ட தீயணைப்பு வீரர்கள்….. Read More »

அறிமுகம் கண்ட தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்……

தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயிலை இந்தோனேஷியா ஆகஸ்ட் 2-ஆம் தேதி திங்கட்கிழமையன்று அறிமுகப்படுத்தியது. சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிலான Jakarta மற்றும் Bandung பகுதிகளுக்கு இடையே இந்த ரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். Whoosh எனப்படும் இந்த அதிவேக ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவித்தனர். இந்த அதிவேக ரயிலில் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 600 பேர் பயணிக்க முடியும் என்று கூறினர். இந்த அதிவேக ரயில் சேவை

அறிமுகம் கண்ட தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்…… Read More »

மலேசியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை…..மலேசியா பிரதமர் எச்சரிக்கை….

அரிசி ஏற்றுமதியில் இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்தது.இந்த தாக்கம் மலேசியாவை பாதித்துள்ளது. மலேசியாவில் விலைவாசி உயர்ந்து வருகிறது.பற்றாக்குறை சூழ்நிலையும் நிலவி வருகிறது. மலேசியா தனது அரிசி தேவையில் 38 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. தட்டுப்பாடுகள் ஏற்படும் சூழ்நிலையால் பொதுமக்கள் அரிசியை பாதுகாத்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. அதிக அளவில் அரிசியை கொள்முதல் செய்து அதனை சேமிப்பதால் விலை உயர்கிறது என்று நம்பப்படுகிறது. அரிசி கிடைக்காமல் மக்கள் சிரமப்படும் நேரத்தில் அதனை பத்துக்கல் பணியில் ஈடுபடுவோர் மீது

மலேசியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை…..மலேசியா பிரதமர் எச்சரிக்கை…. Read More »

கருணை கொலை செய்யப்பட்ட கரடி…..ஏன்?

Alberta-வின் Banff தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக Parks Canada அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் கரடியை கருணை கொலை செய்தனர். சம்பவம் நடந்த பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று Parks Canada தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை கவரும் இந்த பூங்கா, Grizzly மற்றும் கருப்பு கரடிகளுக்கு தாயகமாக உள்ளது.

கருணை கொலை செய்யப்பட்ட கரடி…..ஏன்? Read More »

மீன் பிடிக்க சென்றவர்களின் படகில் மோதிய திமிங்கலம்….. ஒருவர் பலி…..

ஆஸ்திரேலியாவில், இருவர் படகில் மீன் பிடிக்க சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு திமிங்கலம் அவர்களது படகில் மோதியது. படகு கவிழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் காயமடைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். திமிங்கலம் படகின் மிக அருகில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் பரந்த கடற்கரையில் 10 பெரிய மற்றும் 20 சிறிய வகை திமிங்கலங்கள் உள்ளன என்றும், இப்பகுதியில்

மீன் பிடிக்க சென்றவர்களின் படகில் மோதிய திமிங்கலம்….. ஒருவர் பலி….. Read More »