துருக்கி சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்! சிங்கப்பூர் அனுதாபம்!சிங்கப்பூரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அனுதாபம் தெரிவித்தார். இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு அனுதாபக் கடிதங்களை அனுப்பி வைத்தார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இந்த பேரிடரில் உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தாக்கத்திலிருந்து துருக்கி விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையையும் …