5 மாத இறக்கத்திற்கு பிறகு உற்பத்திதுறை ஏற்றம் !
சிங்கப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக உற்பத்தி துறை அதன் வளர்ச்சியில் இறக்கம் கண்டது. ஆனால், சென்ற மாதம் சற்று ஏற்றம் கண்டுள்ளது. தொழிற்சாலைகளில் கூடுதல் தேவை இருப்பதால், அவற்றின் உற்பத்தியும் கூடியுள்ளது. சீனா தனது வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதால், ஒட்டுமொத்த தேவைகளும் கணிசமாக அதிகரிக்கிறது. ஆனால், மின்னியல் துறை சற்று குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி உயர்ந்து வந்தாலும், அதன் வளர்ச்சி சற்று மெதுவாக தான் இருக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுவதாக கூறுகின்றனர். சென்ற மாதம் …