Singapore News in Tamil

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சந்திரமோகன் என்பவரிடம் இரண்டு லட்சம் வாங்கியுள்ள தம்பதி.அதன் பின் இரண்டு வருடங்களாகியும் வேலை வாங்கித் தராததால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.

சந்திரமோகன் கோவையில் ஏ. ஜி. புதூர் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் B.SC Computer science படித்துள்ளார். படித்து முடித்த பின் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.

இதனால் சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 2021-ஆம் ஆண்டு கோவைக்கு திரும்பி வந்துள்ளார். அதன் பின் கோவையிலேயே கம்ப்யூட்டர் தொடர்பான தொழிலில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. மீண்டும் வெளிநாடு செல்வதற்காக வெளி நாட்டிற்கு ஆட்களை அனுப்பும் SHEA இமிகிரேஷன் என்ற நிறுவனத்திடம் சென்றுள்ளார். இந்நிறுவனத்தை நடத்தி வரும் அருண் மற்றும் ஹேமலதா ஆகிய இருவரும் இவரிடம் போலாந்து நாட்டில் கணினித் தொடர்பாக வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

இதற்கு 4.50 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். முன்பணமாக இரண்டு லட்ச ரூபாயும் பெற்றுக் கொண்டுள்ளனர். இரண்டு வருடங்கள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் அவர் காவல்துறையில் அவர்கள் மீது புகார் அளித்தார். அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவர் மீதும் பண மோசடி வழக்குப் பதியப்பட்டுள்ளது.