குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு கை கொடுக்கும் Casa Raudha அமைப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் குடும்ப வன்முறைக்கு எதிராக வலுவான நிலைப்பாடு தேவை என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரை மேலும் உள்ளடக்கிய சமுதாயமாக மாற்ற,குறிப்பாக குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என்றார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் Casa Raudha அமைப்பின் புதிய தலைமைகத்தின் திறப்பு விழாவில் திரு.ஹெங் பேசினார்.
பிடோக்கில் அமைந்துள்ள இந்த வளாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைச் சேவைகளையும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரச சேவைகளையும் வழங்குகிறது.
சிங்கப்பூரில் குடும்ப வன்முறையைச் சமாளிக்க Casa Raudha எடுக்கும் முயற்சிகளில் அவையும் அடங்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan