சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்…!!!

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய 14 ஓட்டுநர்களின் கார்கள் பறிமுதல்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற 14 பேரின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாரம் சாங்கி விமான நிலையத்தில் மூன்று நாள் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஓட்டுநர்கள் சிங்கப்பூரிலும் சட்டவிரோதச் சேவைகளை வழங்கியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆணையம் பயணிகளுக்கு அறிவுரை வழங்கியது.

மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு போதுமான காப்புறுதி பாதுகாப்பு உள்ளதா மற்றும் உரிமம் உள்ளதா என்பதை உறுதியாக கூற முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உரிமம் பெறாத சட்டவிரோத சேவை வழங்குபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 3,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் அவர்களின் கார்களும் பறிமுதல் செய்யப்படலாம்.

Follow us on : click here ⬇️