புக்கிட் பஞ்சாங்கில் நேருக்கு நேராக மோதிய கார்கள்…. துரிதமாக செயல்பட்டு காப்பாற்றப்பட்ட 68 வயது பெண்மணி!!

சிங்கப்பூரில் புக்கிட் பஞ்சாங்கில் மார்ச் 16 அன்று ஒரு காருக்கும், இரண்டு PMAs க்கும் (கார்) இடையில் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 68 வயதுடைய பெண் மயக்கமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த விபத்து மாலை சுமார் 4.15 மணியளவில் புக்கிட் பஞ்சாங் ரிங் ரோடு மற்றும் சேகர் சாலை சந்திப்பில் நேர்ந்தது.

இந்த விபத்துக்கு தொடர்புடைய 32 வயது கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கவனக்குறைவால் கார் ஓட்டியதால் இந்த விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்தில் மயக்கமடைந்த பெண் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல் துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்தன.

மற்றொரு நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார். விபத்து நடந்த இடத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும், நான்கு துணை மருத்துவர்களும் அந்த நபருக்கு உதவி செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.