சிங்கம் தாக்கியதில் உயிரிழந்த பராமரிப்பாளர்….. உணவு வைக்க சென்ற போது நேர்ந்த கொடுமை…..

ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் உள்ள Tohoku Safari உயிரியல் பூங்காவில் பணிபுரியும், 53 வயதான விலங்குகளின் பராமரிப்பாளர் Kenichi Kato என்பவரை ஒரு சிங்கம் தாக்கியதில், அவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை பிற்பகல் சிங்கத்தின் கூண்டுக்குள், அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கசிந்து மயங்கி கிடந்தார் என்று காவல்துறையினர் கூறினர்.

பூங்காவின் மூத்த அதிகாரி, Kato உணவை பயன்படுத்தி சிங்கத்தை கூண்டுக்குள் இழுக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்.

மேலும், கதவை திறந்து விலங்குகளுக்கு உணவை வைத்தபிறகு, மீண்டும் கதவு மூடப்பட்டு பூட்டப்பட வேண்டும் என்றும், Kato கதவை மூடாததால் இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Kato, இந்த பூங்காவில் உள்ள மாமிச உண்ணிகளான சிங்கங்கள், புலிகள் மற்றும் கரடிகளுடன் பணிபுரிந்த ஒரு மூத்த ஊழியர் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பூங்காவின் துணைத் தலைவர், Kato மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மேலும் இது போன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் வரை, இந்த பூங்கா செயல்படாது என்றும் அவர் தெரிவித்தார்.