மக்களிடையே அதிகம் வலம் வரும் அட்டைப்பெட்டிகள்!! குறைக்க முயற்சி எடுக்கும் நிறுவனங்கள்!!

மக்களிடையே அதிகம் வலம் வரும் அட்டைப்பெட்டிகள்!! குறைக்க முயற்சி எடுக்கும் நிறுவனங்கள்!!

சிங்கப்பூரில் மின்வர்த்தக நிறுவனங்கள் குப்பைகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதற்கான புதிய வழிமுறையும் அறிமுகமாகவுள்ளது.

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு நாளும் சுமார் 186,000 பார்சல்கள் விநியோகிக்கப்பட்டன.

பொருட்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு அட்டைப்பெட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

அதனால் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகள் முன்வைக்கப்படுகின்றன.


அந்த அட்டைப்பெட்டிகளால் ஆண்டுக்கு சுமார் 16,000 டன் குப்பைகள் உருவாகிறது.

குப்பையை தடுக்கும் முயற்சியில் சிங்கப்பூர் உற்பத்தியாளர் சம்மேளனம் மற்றும் சிங்கப்பூர் போஸ்ட் ஆகியவை ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்கிறது.

அந்த நடவடிக்கைக்கு தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆதரவளிக்கும்.