பார்ட்லி சாலைக்கு அருகே கார், பைக் மோதி விபத்து!!

பார்ட்லி சாலைக்கு அருகே கார், பைக் மோதி விபத்து!!

சிங்கப்பூரின் பார்ட்லி சாலைக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று காலை நடந்தது.

இந்த விபத்து குறித்து காலை 8.50 மணியளவில் காவல்துறையினருக்கும், 9.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 50 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார்.

காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கார் ஓட்டுநரான 35 வயதுடைய பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.