கார், பைக் மோதி விபத்து!! பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!!

கார், பைக் மோதி விபத்து!! பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!!

சிங்கப்பூரில் மேக்பெர்சன் மற்றும் அப்பர் அல்ஜூனிட் சந்திப்பில் கார், பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் ஜூன் 22-ஆம் தேதி நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கும் ஜூன் 22-ஆம் தேதி அன்று மாலை 3.10 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தன.

பைக் டிரைவர் (39),பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர்(19) என இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை கூறியது.

காவல்துறை 61 வயதுடைய கார் டிரைவரை விசாரித்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ எல்ஜிரோடு விஜிலன்ட் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.