அலெக்ஸாண்ட்ரா சாலையில் ஏற்பட்ட கார் விபத்து..!!! இருவர் மருத்துவமனையில் அனுமதி...!!!
அலெக்ஸாண்ட்ரா சாலையில் நேற்று (டிசம்பர் 7) 4 வாகனங்கள் மோதிய பயங்கர விபத்து நடந்தது.
நீல நிற செடான் கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது சாலை தடுப்பின் மீது விழுந்தது.
சாலைத் தடுப்பின் மீது விழுந்ததைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
செடானின் 61 வயது ஓட்டுநரும், 91 வயது பெண் பயணியும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குவீன்ஸ்வே ஷாப்பிங் வளாகத்திற்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது.
கேன்ஜெஸ் அவென்யூ நோக்கி அலெக்ஸாண்ட்ரா சாலையில் சென்ற 4 வாகனங்கள் விபத்தில் சிக்கியது.
நேற்று மாலை 4.20 மணியளவில் தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow us on : click here