சிங்கப்பூரில் உங்களால் சமாளிக்க முடியுமா? முடியாதா? என்பதை இப்பதிவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூரில் உங்களால் சமாளிக்க முடியுமா? முடியாதா? என்பதை இப்பதிவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூர் வருபவர்கள் தயவு செய்து எவ்வளவு வீட்டு வாடகை?, சாப்பாட்டிற்கு எவ்வளவு செலவாகும்?,ஒரு மாதத்திற்கு பஸ்,போன் செலவு எவ்வளவாகும்?
இதர செலவு எவ்வளவு ஆகும்? என்பதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பின் சிங்கப்பூருக்கு வருவது நல்லது.

செலவுகள்:

வாடகை குறைந்தது $600

Food cooking (உணவு சமைத்து சாப்பிடுவதற்கு) குறைந்தது $350

Outside food (வெளியில் உணவு சாப்பிடுவது) குறைந்தது $650

Phone & bus(போக்குவரத்து செலவு) $150

Etc., expenses (இதர செலவுகள்) $300

ஒரு மாதத்திற்கு 1700$ ,or 1400$ மிகாமல் செலவாகும்.
அதன் பின் வருடத்திற்கு ஒரு முறை சென்று வருவதற்கு flight tickets,other expenses $3500 to $4000.

வருடத்திற்கு ,உங்களுக்காக மட்டும் 20000$ to 25000$ வரை நீங்கள் சம்பாதிக்க வேண்டும்.

இவையெல்லாம் குறைந்தபட்ச செலவு கணக்காகும் .

தண்ணீருக்கு ஆகும் செலவையும் கணக்கு போட்டு பாருங்கள். சிகரெட் பழக்கம் உள்ளவராக இருந்தால் தனியாக கணக்கு போட்டு பாருங்கள்.

IT வேலைய தவிர,இதர வேலைகள் அனைத்திற்கும் 900$ to அதிகபட்சமாக 3000$ தான் BASIC SALARY கிடைக்கும்.உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் ,உங்களுக்கு ஆகும் செலவையும் கணக்கு போட்டு பாருங்கள் அதில் எவ்வளவு சேமித்து வைக்க முடியும் என்பதை கணக்கு போட்டு பாருங்கள்.ஏஜென்ட் கேட்கும் பணத்திற்கு எதற்காக இவ்வளவு பணம் என்பதையும் உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து உங்களால் சமாளிக்க முடியுமா என்பதையும் தெரிந்து கொண்ட பின் சிங்கப்பூருக்கு வருவது நல்லது.

டெஸ்ட் அடித்து Work Permit இல் வருபவர்களுக்கு கம்பெனியே தங்குமிடம் அளிப்பதனால் இதில் பாதி செலவே ஆகும்.


ஒரு சில வேலைக்கு சாப்பாடு மற்றும் தங்குமிடம் அளித்தால் இந்த செலவுகள் கணக்கில் சேராது. உங்களுக்கு அதற்கு ஆகும் செலவு மிச்சமாகும். Work Permit இல் வருபவர்களுக்கு இந்த செலவு கணக்கு மாறுபடும்.
ஒரு சில கம்பெனிகள் உணவு மற்றும் தங்குமிடத்தை இலவசமாக அளிப்பவர்களுக்கு இந்த செலவு கணக்கு பொருந்தாது.

S Pass, E Pass, NTS permit இல் வருபவர்களுக்கு இந்த செலவு கணக்கு பொருந்தும்.