சிங்கப்பூரிலும் பனிப்பொழிவைக் காணலாமா?

சிங்கப்பூரிலும் பனிப்பொழிவைக் காணலாமா?

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது.சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் உணர்வை மக்கள் உணரும் வகையில் சில இடங்களில் பனிப்பொழிவைக் கண்டு களிக்கலாம்.

கரையோர பூந்தோட்டத்தின் ‘கிறிஸ்துமஸ் ஒண்டர்லாண்ட்’ சிறப்பு கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை காணலாம்.இந்த காட்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்கியோருக்கு அனுமதி இலவசம்.

Vivocity கடைத்தொகுதியில் இந்த மாதம் 25 ஆம் தேதி வரை கண்டு களிக்கலாம்.அதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

Marina Square கடைத்தொகுதியில் அடுத்த ஆண்டுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை காணலாம் .இதற்கு கட்டணம் இல்லை.

Capitol Singapore இல் இந்த மாதம் 25 ஆம் தேதி வரை கண்டு மகிழலாம்.இதற்கு கட்டணம் இல்லை.

Jewel சாங்கி விமான நிலையம்-Jewel Rain Vortex இல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை கண்டு ரசிக்கலாம்.அதற்கு கட்டணம் இல்லை.